விஜய் டிவியில் இந்த வார நீயா? நானா? நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “நீயா..நானா” நிகழ்ச்சி காலம் கடந்தாலும் சின்னத்திரை நிகழ்ச்சிகளுக்கு இருக்கும் மவுசு குறையாமல் இருக்கிறது என்பதற்கு முக்கிய உதாரணமாக திகழ்கிறது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மதியம் 12.30 மணிக்கு இந்த நிகழ்ச்சியானது ஒளிபரப்பாகிறது. கோபிநாத் இந்த நிகழ்ச்சியை பல ஆண்டுகளாகவே தொகுத்து வழங்கி வருகிறார். இதில் பகிரப்படும் கருத்துகள் அனைத்து சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தும்.
அதில் இந்த வாரம் “சோம்பேறி கணவர் vs பிட்னெஸ்ஸை விரும்பும் மனைவி” என்ற பெயரில் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இதில் ஒரு கணவன், மனைவி பேசும் உரையாடல் பலருக்கும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.
கணவர்: நான் தொழிற்சாலையில் வேலை பார்க்கிறேன். அங்கே காலை, மதியம் என இருவேளைக்கான உணவை சாப்பிடுவேன் றினார். கம்பெனி தரும் உணவு என்பதால் எதுவும் சொல்ல முடியாது. இரவு உணவு மட்டுமே வீட்டில் சாப்பிடுவேன். ஒரு இரண்டு நாட்கள் முன்பு கூட வீட்டில் மணத்தக்காளி கீரை மற்றும் முருங்கைக்கீரை இருந்தது. ஆனால் என்னுடைய மனைவி தோசை ஊற்றி வைத்திருக்கிறேன் என சொல்லி எனக்கு பிடிக்காத வேர்க்கடலை சட்னி செய்திருந்தார். இதை என்ன சொல்வது? என வேதனை தெரிவித்திருந்தார்.
கோபிநாத்: தொழிற்சாலையில் திங்கள் முதல் வெள்ளி வரை உணவின் வகைகளும் தரமும் மாறி மாறி இருக்கலாம். அப்ப வீட்டிலையாவது நல்ல சாப்பாடு செய்து கொடுத்தால் என்ன?
மனைவி: "ரொம்ப சாப்பிட்டா வெயிட் போடுமே" என கூறுகிறார்.
கணவர்: "ஆறு நாள் வேலை பார்க்கும் நிலையில் என்னைக்காவது ஒரு நாள் தான் இப்படி எல்லாம் செய்கிறார்கள். அன்னைக்கும் சாப்பிடாமல் இருந்தால் எப்படி? மணத்தக்காளி கீரை கிடைப்பதெல்லாம் ரொம்ப கஷ்டம்" என புலம்புகிறார்.
கோபிநாத்: "சிக்கன் மட்டன் கேட்டவன் எல்லாம் கூட பரவாயில்லை. கேவலம் மணத்தக்காளி கீரை கேட்கும் ஒருவனுக்கு செய்து கொடுத்தால் என்ன?” என அந்தப் பெண்ணிடம் கேள்வி எழுப்பினார்.
கணவர்: வீட்டில் மணத்தக்காளி கீரை எல்லாம் செய்வார்கள். நான் ஆசையாக சாப்பிடலாம் என நினைக்கும் போது தோசை சுட்டு வைத்திருக்கிறேன், சோறு சாப்பிட்டு உடல் எடை அதிகரிக்க போகிறாயா என மனைவி கேட்பார்.
மனைவி: சாப்பிட்டால் அரை மணி நேரத்தில் தூங்கி விடுவார்
கோபிநாத்: அப்ப தோசை சாப்பிட்டால் 3 மணி நேரம் முழித்து இருப்பார்களா? என கவுண்டர் கொடுத்தார் கோபிநாத். இப்படியாக நீயா நானாவின் இந்த வார நிகழ்ச்சி கலகலப்பாக சென்றது.