Kizhakku Vaasal serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘கிழக்கு வாசல்’ சீரியலில் இன்றைக்கு (ஆக. 30) ஒளிபரப்பாகவுள்ள காட்சிகள் பற்றி காணலாம்.
கிழக்கு வாசல் சீரியல்
தனது ராடன் மீடியா நிறுவனத்தின் மூலம் நடிகை ராதிகா விஜய் டிவியில் ‘கிழக்கு வாசல்’ சீரியலை தயாரித்துள்ளார். இந்த சீரியல் கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் இயக்குனர் எஸ் .ஏ.சந்திரசேகர், நடிகைகள் ரேஷ்மா முரளிதரன்,தாரிணி, நடிகர்கள் ஆனந்தபாபு, வெங்கட் ரங்கநாதன், அருண் குமார் ராஜன், ரோஜா ஸ்ரீ, கிரண் மாயி, அஸ்வினி ராதா கிருஷ்ணா, கீதா நாராயணன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த சீரியல் தினமும் இரவு 10 மணிக்கு விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
இன்றைய எபிசோட் அப்டேட்
வீட்டில் தொடர்ந்து மேற்படிப்பு படிப்பது தொடர்பாக பிரச்சினை நிகழ்கிறது. இதனால் மனமுடையும் ரேணு வீட்டை விட்டு காணாமல் போகிறாள். அவரை குடும்பத்தினர் அனைவரும் தேடுகின்றனர். வேலைக்கு சென்ற மாணிக்கம், விளையாட சென்ற மலரிடம் தகவல் தெரிவிக்கப்பட அவர்கள் அதிர்ச்சியடைகின்றனர். மலர் ரேணுவின் தோழி வீட்டுக்கு சென்று கேட்டுப் பார்க்கிறாள்.
மறுபக்கம் ஷண்முகத்துடன் ரேணுவை தேடி செல்லும் சாமியப்பன் பல இடங்களில் தேடியும் அவரை காணவில்லை. இதற்கிடையில் ரேணுவை தேடாமல் தன் வேலைகளில் குறியாக இருக்கும் நடேசனை கண்டு பார்வதி டென்ஷனாகி சண்டை போடுகிறார். மறுபக்கம் சாமியப்பன் ரேணு தன் வீட்டுக்கு வந்தது குறித்து அவரின் வளர்ப்பு குறித்தும் கண்கலங்க பேசுகிறார். அவரை தேற்றும் ஷண்முகம், எப்படியாவது தேடி கண்டுபிடித்து விடலாம் என தேற்றுகிறார். ஆனால் யாரிடம்
இறுதியாக கடற்கரையில் தனியாக இருக்கும் ரேணுவை சாமியப்பன், ஷண்முகம் இருவரும் கண்டுபிடிக்கின்றனர். என்னவோ ஏதோன்று கேட்க, தான் மனசு சரியில்லாமல் வீட்டை விட்டு வந்ததாகவும், தன்னுடைய பிறப்பால் இப்படி ஒரு நிலைமைக்கு வந்திருப்பதாகவும், புலம்புகிறார். அவளுக்கு சமாதானம் சொல்லி வீட்டுக்கு அழைத்து செல்கிறார்கள். வீட்டுக்கு சென்றதும் எல்லோரும் பதற்றமானதை பற்றி சொல்கிறார். கூடவே நடேசனும் வந்து திட்டுகிறார். இதுபோன்ற காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.