Kizhakku Vaasal serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘கிழக்கு வாசல்’ சீரியலில் இன்றைக்கு ஒளிபரப்பாகவுள்ள காட்சிகள் பற்றி காணலாம்.


கிழக்கு வாசல் சீரியல் 


நடிகை ராதிகா தனது ராடன் மீடியா நிறுவனத்தின் மூலம் அவர் விஜய் டிவியில் ‘கிழக்கு வாசல்’ சீரியலை தயாரித்துள்ளார். இந்த சீரியல் கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் இயக்குனர் எஸ் .ஏ.சந்திரசேகர், நடிகைகள் ரேஷ்மா முரளிதரன்,தாரிணி, நடிகர்கள் ஆனந்தபாபு, வெங்கட் ரங்கநாதன், அருண் குமார் ராஜன், ரோஜா ஸ்ரீ, கிரண் மாயி, அஸ்வினி ராதா கிருஷ்ணா, கீதா நாராயணன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த சீரியல் தினமும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகிறது. 


இன்றைய எபிசோட் அப்டேட்


சிவகாமிக்கு காலில் அடிப்பட்டு விட்ட நிலையில் ரேணு கட்டுபோட்டு விட்டு, ‘என்னால் தான் இந்த வீட்டில் இத்தனை பிரச்சினையா இருக்கு’ என சொல்லி ஃபீல் செய்கிறார். இதனைக்கேட்டு வருத்தப்படும் சிவகாமி, ’எனக்கு என்னுடைய தம்பி, அவன் குடும்பத்தை விட என் பொண்ணு தான் முக்கியம்’ என சொல்ல ரேணு கண்கலங்குகிறார். இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருக்கும் சாமியப்பன், ரேணுவை அழைத்து என்ன ஆனாலும் தைரியமாக இருக்க வேண்டும் என சொல்கிறார். 


அப்போது  அங்கு வரும் பார்வதி, நீ படிக்க வேண்டும், அதற்காக எவ்வளவு பணம் செலவாகுமோ அதற்கு நான் ஏற்பாடு செய்கிறேன் என கூறுகிறார். பின்னர் வீட்டுக்கு வரும்  ஷண்முகம், இரவு முழுவதும் தான் ஆட்டோ ஓட்டி சம்பாத்தித்த பணத்தை ரேணுவிடம் கொடுத்து படிப்புக்காக வைத்துக் கொள்ளுமாறு தெரிவிக்கிறார். அனால் அந்த பணத்தை மலரிடம் கொடுத்து அவரின் ஸ்போர்ட்ஸ் ஆக்டிவிட்டிக்காக பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்க, ரேணுவின் குணம் கண்டு அனைவரும் நெகிழ்ச்சியடைகின்றனர்.



இதனைத் தொடர்ந்து மாணிக்கம், மாயாவை சமாதானம் செய்யும் காட்சிகள் இடம் பெறுகிறது. இதற்கிடையில் நடேசனை சந்திக்க பார்வதி வருகிறார். ரேணுவுக்கு கொடுத்த வாக்குறுதியை கேட்ட நடேசன் கடுப்பாகிறார். பார்வதியை திட்டுகிறார். இதனையடுத்து அர்ஜூன் ரேணுவுக்கு வீடியோ கால் செய்து இருவரும் திருமணம் செய்துக் கொள்ளலாம். நாம் மாலையும் கழுத்துமாக நின்றால் ஒன்றும் சொல்ல மாட்டார் என சொல்லி சமாளிக்கிறார். 


தன்னை பார்க்க வருமாறு அர்ஜூன் சொல்ல இவர்கள் வீடியோ கால் பேசுவதை அர்ஜூன் அப்பா தயாளன் ஒட்டுக்கேட்கிறார். ஆனால் அதையெல்லாம் ரேணு மறுக்கிறார். ஆனால் தான் தற்கொலை செய்துக் கொள்ளப் போவதாக அர்ஜூன் மிரட்ட ரேணு பரிதவிக்கும் காட்சிகளோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.