Kizhakku Vaasal serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘கிழக்கு வாசல்’ சீரியலில் இன்றைக்கு ஒளிபரப்பாகவுள்ள காட்சிகள் பற்றி காணலாம்.
கிழக்கு வாசல் சீரியல்
நடிகை ராதிகா தனது ராடன் மீடியா நிறுவனத்தின் மூலம் அவர் விஜய் டிவியில் ‘கிழக்கு வாசல்’ சீரியலை தயாரித்துள்ளார். இந்த சீரியல் கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் இயக்குனர் எஸ் .ஏ.சந்திரசேகர், நடிகைகள் ரேஷ்மா முரளிதரன்,தாரிணி, நடிகர்கள் ஆனந்தபாபு, வெங்கட் ரங்கநாதன், அருண் குமார் ராஜன், ரோஜா ஸ்ரீ, கிரண் மாயி, அஸ்வினி ராதா கிருஷ்ணா, கீதா நாராயணன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த சீரியல் தினமும் இரவு 10 மணி ஒளிபரப்பாகிறது.
இன்றைய எபிசோட் அப்டேட்
அர்ஜூன் தனக்கு வீட்டில் பெண் பார்ப்பதாக ரேணுவிடம் சொல்கிறார். ஆனால் தனக்கு கல்யாணம் செய்ய விருப்பமில்லை என ரேணு கூறுகிறார். தயாளன், சாமியப்பனை சபையில் வைத்து அவமானம் செய்ததால் நாம் கல்யாணம் செய்தால் வாழ்க்கையே போராட்டம் ஆகிவிடும் என காரணம் கூறுகிறார். ஆனால் தன்னை நம்புமாறு அர்ஜூன் வலியுறுத்த, எங்க அப்பாவின் நம்பிக்கை தான் எனக்கு முக்கியம் என ரேணு திட்டவட்டமாக தெரிவித்து விட்டு அங்கிருந்து செல்கிறார். அப்போது ஷண்முகம் வந்து தன்னை மரியாதை இல்லாமல் பேசியதால் அர்ஜூன் டென்ஷனாகிறார். பின்னர் ரேணு, ஷண்முகத்தின் ஆட்டோவில் வீட்டுக்கு செல்கிறார்.
மாணிக்கம், மாயாவை அடித்ததை நினைத்து கம்பெனியில் ஃபீல் செய்கிறார். அப்போது அங்கு பார்வதி வருகிறார். மாயாவை அடித்தது சொல்லி அட்வைஸ் செய்கிறார். ஆனால் ரேணுவை மற்றவர்கள் சொல்வது தனக்கு கஷ்டமாக இருப்பதாக சொல்லி,மாயா நடந்து கொள்வது தனக்கு பிடிக்கவில்லை என தெரிவிக்கிறார். இந்த பக்கம் தம்பி தயாளனை அடித்ததை எண்ணி ஃபீல் செய்யும் சிவகாமி மீது பைக் மோதுகிறது. அங்கு வரும் அர்ஜூன் அவரை வீட்டுக்கு அழைத்து செல்கிறார். அங்கு குடும்பத்தினரிடம் நடந்ததை எல்லாம் கூறுகிறார்.
அப்போது ரேணுவை தான் கல்யாணம் செய்ய விரும்புவதாக அர்ஜூன் அனைவரிடம் தெரிவிக்கிறார். ஆனால் அப்பா,அம்மா இல்லாமல் இதைப் பற்றி பேசுவது நியாயமில்லை என சாமியப்பன் மறுக்கிறார். குடும்பத்தினரும் பதில் எதுவும் பேசாமல் அமைதியாக நிற்கின்றனர். அந்நேரம் அந்த வழியாக போகும் தயாளன் அர்ஜூனின் கார் சாமியப்பன் வீட்டு வாசலில் நிற்பதை கண்டு அதிர்ச்சியடைகிறார்.
வீட்டின் உள்ளே செல்கிறார். சாமியப்பன் குடும்பத்தினரை சரமாரியாக விமர்சிக்கிறார். இதனைக் கேட்டு அவர் தயாளனிடம் அமைதியாக இருக்குமாறு சொல்ல, வாக்குவாதம் நீள்கிறது. அப்போது நான் அர்ஜூனுக்கு பெரிய இடத்தில் சம்பந்தம் பேசுகிறேன். அட்ரஸ் இல்லாத ஆளையெல்லாம் என் வீட்டுக்கு மருமகளா கூட்டுப்போக முடியாது என தெரிவிக்கும் காட்சிகளோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.