சின்னத்திரை ரசிகர்களின் மிகப்பெரிய பொழுதுபோக்காக இருப்பது சீரியல்கள் தான். அதிலும் சீரியல் நடிகர்கள் சமீப காலமாக வெள்ளித்திரை நடிகர்களுக்கு இணையாக மிகவும் பிரபலமடைந்து வருகிறார்கள். அப்படி டி.ஆர்.பி ரேட்டிங் வரிசையில் முன்னணியில் இருக்கும் இரண்டு சீரியல்கள் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் சன் டிவியின் எதிர் நீச்சல். 


 



குடும்ப சென்டிமெண்ட் :


குடும்பம் சார்ந்த கதைகள், குடும்ப சென்டிமென்டை மையமாக வைத்து ஒளிபரப்பாகும் சீரியல்கள்   சின்னத்திரை ரசிகர்களை பெரிய அளவில் ஈர்க்கும் அப்படி வெவ்வேறு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானாலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் எதிர் நீச்சல் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.   


 



எக்கச்சக்கமான பேன் பேஸ்:


இந்த இரு சீரியல்களுக்குமே ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக கதாபாத்திரங்களுக்கு மிகப்பெரிய பேன் பேஸ் இருக்கிறது. எதிர் நீச்சல் சீரியலின் ஆதி குணசேகரன், ரேணுகா, நந்தினி, கரிகாலன் கதாபாத்திரங்களை போல மீனா, தனம், கதிர், கண்ணன் என பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்கள் கதாபாத்திரங்களுக்கும் ஏராளமான ரசிகர் கூட்டம் உள்ளது. 


இந்த இரு சீரியல்களும் வெவ்வேறு கதையம்சம் கொண்டவை என்றாலும் ஒரு ஒற்றுமையும் உள்ளது. அதை பலரும் கவனித்து இருக்கக்கூடும். ஆதி குணசேகரன் Vs சத்யமூர்த்தி கதாபாத்திரங்கள் இடையே இருக்கும் ஒற்றுமையை பார்க்கலாம். 


* குடும்பத்தில் மூத்த அண்ணன். 


* குடும்பத்துக்காக சிறு வயது முதலே பாடுபட்டு தம்பிகளை கரையேற்றியவர். 


* மூன்று தம்பிகள் அவரது மனைவிகள் மற்றும் அம்மா என கூட்டுக்குடும்பமாக ஒரே வீட்டில் இருப்பார்கள். 


* மூன்று தம்பிகளையும் அவர்களது மனைவிகளையும் ஆட்டுவிக்கும்   குடும்ப தலைவனாக இயக்குபவர்கள். 


* மூன்று தம்பிகள் மட்டுமின்றி அவர்களது மனைவிகளும் இவர்கள் சொன்ன படி தான் கேட்க வேண்டும் என்ற கண்டிஷனில் வாழ்பவர்கள். 


* வீட்டில் இருக்கும் அனைத்து பெண்களுக்குமே படித்த பட்டதாரி பெண்கள் என்றாலும் வீட்டுக்குள்ளேயே தான் இருக்க வேண்டும்.


* லேட்டஸ்ட் லைஃப் ஸ்டைலுக்கு அடாப்ட் செய்து கொள்ளாதவர்கள். 


* மூன்று தம்பிகளும் அண்ணன் பேச்சை தட்டாதவர்கள்  


* கோபம் வந்தா கத்தி பேசியே எதிரில் இருப்பவர்களை அடக்கிவிடுவது. 


* அடிக்கடி பாசத்தை காட்டி கட்டிபோடுவது, செய்ததை எல்லாம் சொல்லி சொல்லி காட்டுவது. 


இப்படி இரண்டு அண்ணன்களுக்கு பல விஷயங்கள் ஒத்துபோனாலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சத்யமூர்த்தி ஹீரோவாகவும், எதிர் நீச்சல் ஆதி குணசேகரன் மோசமான வில்லனாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளார்கள். இருவருமே சீரியல்களை நிமிர்த்தி வைத்துள்ளதில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.