நடிகர் கமல்ஹாசன் பற்றி சர்ச்சையாக பேசிய சின்னத்திரை பிரபலங்களான குரேஷி மற்றும் புகழ் ஆகியோர் இதுதொடர்பாக மன்னிப்பு கேட்டுள்ளனர். 


சின்னத்திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி ஒளிபரப்பாக தொடங்கியது. இதில் பங்கேற்ற 23 போட்டியாளர்களில் நடிகை மாயா கிருஷ்ணனும் ஒருவர். பல படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த அவர், நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் படத்திலும் ஒரு கேரக்டரில் நடித்திருப்பார். அதனடிப்படையில் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக தேர்வு செய்யப்பட்டதாக கூறப்பட்டது. 






இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், பல நாட்கள் மாயாவை சுற்றி பல சர்ச்சைகள் வெடித்தன. வார இறுதி நாட்களில் போட்டியாளர்களிடம் கேள்வி கேட்கும் கமல், மாயாவை கண்டும் காணாமல் விடுவதாக சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டது. மேலும் மாயா சீசன் முழுவதும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்க கமலும் ஒரு காரணம் என்றெல்லாம் கருத்துகள் ரெக்கை கட்டி பறக்கின்றன.






இப்படியான நிலையில் விஜய் டிவி பிரபலங்கள் புகழ் மற்றும் குரேஷி  இருவரும் மேடை நிகழ்ச்சி ஒன்றில்  மாயா மற்றும் கமல்ஹாசன் குறித்து சர்ச்சையான கருத்துகளை கூறினர். துபாயில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில்  புகழ் கேட்கும் கேள்விகளுக்கு குரேஷி கமல் குரலில் பதிலளித்திருப்பார். அதில், “சென்னையில் பிடிச்ச இடம்? மாயாஜால், புடிச்ச படம்? மாயா பஜார், தமிழ்நாட்டில் புடிச்ச இடம்? மாயா வரம் என மாயாவை வைத்து கமல் பதில் சொல்வது போல குரேஷி தெரிவித்திருப்பார். இந்த வீடியோ இணையத்தில் கடும் சர்ச்சையை கிளப்பியது. 


இந்நிலையில் சம்பந்தப்பட்ட வீடியோவில் பேசியது குறித்து மன்னிப்பு கேட்டு குரேஷி மற்றும் புகழ் இருவரும் வீடியோ வெளியிட்டுள்ளனர். அதில், “நானும், குரேஷியும் துபாயில் ஒரு நிகழ்ச்சியை நடத்தினோம். அதில் எங்களுக்கு வழங்கப்பட்ட ஸ்கிரிப்டில் இருந்த கருத்துகள் கமல் ரசிகர்களை காயப்படுத்தியிருந்தால் அதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.இனி வரும் காலங்களில் அதுபோல் செய்யமாட்டோம். நாங்கள் செய்தது பெரிய தவறுதான். இதற்கு நான் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்” என தெரிவித்துள்ளனர். 




மேலும் படிக்க: Dhanush - Udhayanidhi Stalin: கலையை ஊக்குவிக்க நீங்கள் தவறியதில்லை.. உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த தனுஷ்!