விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) தொடரின் இன்றைய எபிசோடில் செழியன் ஜெனியுடன் ஹாஸ்பிடலில் இருக்கிறான். ஜெனியிடம் "என்ன பாப்பா தூங்கிகிட்டே இருக்கு" என கேட்கிறான். "நைட் இரண்டு மணிக்கு வந்து பாரு நல்லா பிரஷ்ஷா முழிச்சுகிட்டு விளையாடிட்டு இருப்பா" என்கிறாள் ஜெனி. அப்போ செழியனுக்கு போன் வருகிறது. அதை செழியனை எடுத்து பார்க்கவும், பாக்கியா செழியனை போனை ஆஃப் பண்ணி வைக்க சொல்கிறாள்.
பாக்கியா ஜெனியின் அம்மாவிடம் ஹாஸ்பிடலில் இருந்து ஜெனியை நாங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறோம். ஜெனி எங்க வீட்டு பொண்ணு தானே நாங்க அவளை பாத்துக்குறோம். நீங்க தனியா எப்படி பாத்துப்பீங்க? என ஜெனியின் அம்மாவிடம் கேட்கிறாள். ஜெனிக்கும் அது தான் விருப்பம் என்பதால் ஜெனியின் அம்மாவுக்கு அதற்கு ஒகே சொல்லிவிடுகிறார்.
வீட்டில் அனைவரும் குழந்தைக்கு டிரஸ் வாங்கிவந்ததை பார்த்து கொண்டு இருக்கிறார்கள். அப்போது பாக்கியா அங்கே வந்து ஜெனி வீட்டுக்கு வரப்போவதை பற்றி சொன்னதும் அனைவரும் சந்தோஷப்படுகிறார்கள். பிறகு கேன்டீன் காண்ட்ராக்ட் விஷயமா போனது பற்றி கேட்க பாக்கியா அது கிடைக்கவில்லை என கூறுகிறாள். என்ன காரணம் என கேட்க ஆபீஸ் ஓனர் பழனிச்சாமி சாருக்கு தெரிந்தவர் என்றாலும் அதை கெடுக்க சில பேர் இருப்பாங்க இல்ல என கூறுகிறாள் பாக்கியா. "ராதிகா தான் ஏதாவது செய்து வேலை செய்து காண்ட்ராக்ட் கிடைக்காமல் செய்தாளா?" என ஈஸ்வரி கேட்க "இல்ல அத்தை இந்த தடவ இதை பண்ணது இனியாவோட அப்பா" என சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.
ஈஸ்வரி பாக்கியாவை திட்ட துவங்கிவிட்டார். கோபியை மட்டும் விவாகரத்து செய்யாமல் இருந்துருந்தால் இந்த பிரச்சினை எல்லாம் வந்து இருக்குமா. அவன் இந்த வீட்ல இருக்குற வரைக்கும் நீ நிம்மதியா தானே இருந்த என பாக்கியா மீது எல்லா பழியையும் போட அனைவரும் ஈஸ்வரி பேசுவதை கேட்டு ஷாக்காகிறார்கள்.
அமிர்தாவை தேடி கணேஷ் அவள் இருந்த பழைய வீட்டுக்கு சென்று விசாரிக்கிறான். பக்கத்துக்கு வீட்டில் இருந்த பெண் ஒருவர் அமிர்தாவுக்கு கல்யாணம் ஆனதை பற்றி சொன்னதும் அதிர்ச்சி அடைகிறான் கணேஷ், இருந்தாலும் அவர் சொன்னதை நம்பவில்லை. பிறகு அமிர்தாவின் ப்ரெண்ட் மூலம் எழிலுக்கும் அமிர்தாவுக்கும் கல்யாணம் நடந்ததை பற்றி தெரிந்து கொள்கிறான்.
அமிர்தா மாமியார் பெயர் பாக்கியா அவங்க ஈஸ்வரி புட்ஸ் என்ற பெயரில் கேட்டரிங் பிசினஸ் நடத்துகிறார். எனக்கு தெரிந்த எல்லா விஷயத்தை நான் சொல்லிட்டேன் என்கிறாள் அமிர்தாவின் ப்ரெண்ட். இதை கேட்டதும் கணேஷுக்கு தலையெல்லாம் சுற்றுகிறது. அத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி (Bakkiyalakshmi) எபிசோட் முடிவுக்கு வந்தது.