சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய எபிசோடில் மருமகள்களை சேலையை மாத்திக்கிட்டு அலங்காரம் செய்து கொண்டு பளபளவென வந்து நிற்க சொல்லி விரட்டுகிறார் விசாலாட்சி அம்மா. வீட்டுக்கு வந்து இருப்பவர்களிடம் சமைக்க சொல்லி சொல்கிறார். வெளியில் கரிகாலன் கிறுக்கன் போல குத்தாட்டம் போட்டு கொண்டு இருக்கிறான். 


கரிகாலன் சமையலுக்கு தேவையான அனைத்தையும் வாங்கி வந்துவிட்டதாக சொல்லி கொடுக்கிறான். இது மாமாவுக்கு நாம கொடுக்குற ட்ரீட். அப்போது விசாலாட்சி அம்மாவின் தம்பி வீட்டுக்கு வருகிறார். அனைவரையும் நலம் விசாரிக்கிறார். மருமகள்களை பற்றி தம்பியிடம் குறை சொல்கிறார். 



வந்து இருக்கும் விசாலாட்சி அம்மாவின் தம்பி சாமியாடி நடக்க போவதை முன்கூட்டியே சொல்ல கூடியவராம். அவரிடம் கரிகாலன் தனக்கு இருக்கும் ஒரே கவலையான முதலிரவு எப்போ நடக்கும் என கேட்கிறான். அது நடக்கவே நடக்குது என்பதை நாசுக்காக சொல்கிறார். கரிகாலன் லூசுத்தனமாக ஆடிக்கொண்டு இருக்கிறான். பெண்கள் அனைவரும் மாடிக்கு செல்ல போகும் போது அவர்களை நிறுத்தி பேசுகிறார் வீட்டுக்கு வந்த சாமியாடி பெரியவர். 


"உங்ககிட்ட எப்படி சொல்றது என தெரியல. சொல்லாம இருக்கவும் முடியல.  இது வரைக்கும் இருந்த குணசேகரன் உங்களை பேசியே கொன்னான். ஆனா இப்போ உள்ள குணசேகரன் உங்களை கொன்னுட்டு தான் பேசுவான். அந்த புளியங்குடி மதுரைவீரன் உத்தரவு படி வருபவன் குணசேகரன் இல்ல மா ஒத்த பட சுடல உக்கிரமா வந்துகிட்டு இருக்கான்" என்கிறார். அதை கேட்டு அனைவரும் அதிர்ச்சியுடன் செல்கிறார்கள். 


"குணசேகரன் வரட்டும் அவரை நல்லா நாலு வார்த்தை கேட்க தான் போறேன்" என நந்தினி சொல்கிறாள். இந்நேரம் சொல்லாததை எல்லாம் நாம சொன்னோம் என சொல்லி ஏத்திவிட்டு இருப்பாங்க. நல்லா வெறி கொண்டு போய் வருவார் என்கிறாள் தர்ஷினி. 


 



ஈஸ்வரி இதை வைத்து ஒரு பிரச்சினை வேண்டாம். அவர் எப்படி வருகிறார் என்பதை பார்த்துவிட்டு பிறகு எப்படி அதை எதிர் கொள்ளலாம் என முடிவு செய்யலாம் என சொல்லி புடவையை மாத்த செல்கிறார்கள். 


பட்டாசு வெடி முழக்கத்துடன் சிங்க நடை போட்டு வீட்டுக்குள் வருகிறார் குணசேகரன். ஆரத்தி எடுக்க சொல்லி ஈஸ்வரி, நந்தினி, ரேணுகாவை அழைக்கிறார் விசாலாட்சி அம்மா. அவர்களை தடுத்துவிடுகிறார் குணசேகரன். பின்னர் தண்ணீரை தலையில் ஊற்றிக்கொண்டு தலைமுழுகிவிட்டதாக சிம்பாலிக்காக சொல்லி வீட்டுக்குள் நுழைகிறார். 


 



வழியில் நின்ற பெண் குழந்தைகளை ஓரம் தள்ளிவிட்டு கதிரையும், ஞானத்தையும் நலம் விசாரிக்கிறார். வரவேற்க வந்த அங்காளி பங்காளிகளை கிளப்ப சொல்லி விரட்டுகிறார். அதை பார்த்த ஈஸ்வரி மற்றும் நந்தினியின் அப்பாக்கள் இருவரும் அப்ப நாங்களும் கிளம்புகிறோம் என சொல்லி கிளம்ப அவர்களை நிறுத்தி வைத்து "பொண்ண கொடுத்து இந்த வீட்டுக்கு பெருமை சேர்ந்தவங்க நீங்க அதனால் இருந்து உட்கார்ந்து விருந்து சாப்பிட்டு போகலாம்" என சொல்கிறார். 


பங்காளிகளை ஞானம் சமாதானம் செய்து அனுப்பி வைக்கும்போது அங்கே வந்த அப்பத்தா அதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோட் முடிவுக்கு வந்தது.