விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி (Baakiyalakshmi ) தொடரின் இன்றைய (அக்டோபர் 20) எபிசோடில் ஈஸ்வரியும் இனியாவும் கோபியை உடனே பார்க்க வேண்டும் என அழுது ஆர்ப்பாட்டம் செய்ய செழியன் அவர்கள் இருவரையும் ராதிகா வீட்டுக்கு அழைத்து செல்கிறான். 


பேனிக் அட்டாக்:


ஈஸ்வரியும் இனியாவும் கோபியிடம் பேசி கொண்டு இருக்கிறார்கள். "என்ன கோபி உனக்கு எப்படி ஹார்ட் அட்டாக் எல்லாம் வந்தது" என சொல்ல "அது ஹார்ட் அட்டாக் இல்ல பேனிக் அட்டாக்" என்கிறாள் ராதிகா. "நீ அங்க இருக்குற வரைக்கும் உனக்கு இது எதுவுமே வரலையே. இங்க வந்ததுக்கு அப்புறம் தான் உனக்கு இது மாதிரி எல்லாம் நடக்குது. வா நம்ம வீட்டுக்கு போகலாம்" என்கிறார் ஈஸ்வரி. "எந்த வீட்டுக்கு அம்மா" என கோபி கேட்க "நமக்கு என்ன பத்து வீடா இருக்கு. இருக்குற ஒரு வீட்டுக்கு தான்" என்கிறார் ஈஸ்வரி. இதை கேட்டு கோபி உட்பட அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். "அவரை அங்க எல்லாம் அனுப்ப முடியாது" என்கிறாள் ராதிகா. 


 



பிறகு ராதிகாவின் அம்மாவுக்கும் ஈஸ்வரிக்கும் இடையே பெரிய காரசாரமான வாக்குவாதம் நடக்கிறது. அதனால் ஈஸ்வரியை "வாங்க பாட்டி நாம வீட்டுக்கு போகலாம்" என சொல்லி அழைத்து செல்கிறான் செழியன். 


ஈஸ்வரி வீட்டுக்கு சென்றதும் "நான் கோபியை இங்க கூட்டிட்டு வர போகிறேன்" என சொன்னதும் அனைவரும் அதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார்கள். "அவர் இங்க எல்லாம் வரக்கூடாது. அவரு எப்படி இங்க வர முடியும்" என எழில் கத்த " நீ பேசாத. என்னை கேட்டு தான் கல்யாணம் பண்ணிக்கிட்டியா? நான் கண்டிப்பா கோபியை வீட்டுக்கு கூட்டிட்டு வருவேன்" என எழில் வாயை அடைத்து விடுகிறார் ஈஸ்வரி.


பாக்கியா சொன்ன அந்த வார்த்தை:


இதை கேட்டு கொண்டு இருந்த பாக்கியா " நீங்க உங்க பையன கூட்டிட்டு வந்து பக்கத்திலேயே வச்சுக்கிட்டு நல்லா பாத்துக்கோங்க... ஆனா அவர் இந்த வீட்டில கால் எடுத்து வைக்கிற அடுத்த நிமிஷம் நான் இந்த வீட்டை விட்டு வெளியே போயிடுவேன்" என பாக்கியா சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். 


ராமமூர்த்தி, எழில் என  வீட்டில் உள்ள அனைவரும் சமாதானம் செய்கிறார்கள். "நீ எதுக்கு மா வீட்டை விட்டு போகணும்" என எழில் சொல்ல "மனசு வச்சா எல்லாம் பண்ண முடியும். நான் கூட்டிட்டு தான் வருவேன்" என விடாப்பிடியாக அதையே திரும்ப திரும்ப சொல்கிறார் ஈஸ்வரி. ராமமூர்த்தி பாக்கியாவிடம் "நீ பயப்படாத மா. அதெல்லாம் அவ கூட்டிட்டு வர மாட்டா " என ஆறுதல் சொல்கிறார்.


ராதிகாவின் வீட்டில் ராதிகாவும் அவளின் அம்மாவும் சேர்ந்து கோபியை கேள்வி மேல் கேள்வியாக கேட்டு துளைக்கிறார்கள். கோபி ராதிகாவின் அம்மாவிடம் "எங்க அம்மா பேசினது தப்பு தான். அவங்க அப்படி பேசி இருக்க கூடாது" என்கிறார்.  ராதிகா உடனே அவளுடைய அம்மாவை அழைத்து கொண்டு வெளியே வந்துவிடுகிறாள்.


"நீ இப்படி அவரை டார்ச்சர் பண்ண அவர் கிளம்பி போய்கிட்டே இருப்பார்" என சொல்ல "நீ இப்படியே இருந்தா அவர் பாட்டுக்கு கிளம்பி அவங்க வீட்டுக்கு போய்கிட்டே இருப்பார். அது அப்புறம் வாழ்க்கை அம்போன்னு போயிடும். பார்த்து உஷாரா நடந்துக்கோ" என சொல்லி ராதிகாவை எச்சரிக்கிறார் அவளின் அம்மா. அத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி (Baakiyalakshmi ) எபிசோட் முடிவுக்கு வந்தது.