விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி (Baakiylakshmi) தொடரின் இன்றைய எபிசோடில் இனியா நிலாவுக்கு சாப்பாடு ஊட்டி கொண்டு இருக்கிறாள். அப்போது நிலா தண்ணீர் கேட்கவும் தண்ணீர் எடுப்பதற்காக வீட்டுக்குள் போகிறாள். அப்போது வெளியில் கேட் திறந்து இருந்ததை பார்க்காமல் இனியா வீட்டுக்குள் சென்றதால் அந்த நேரம் பார்த்து நிலா பாப்பா வீட்டில் இருந்து வெளியில் ஓடிவிடுகிறாள். 


தண்ணீர் கொண்டு வந்த பார்த்தால் நிலாவை காணவில்லை. பதறிய இனியா எல்லா இடத்திலேயும் தேடிப் பார்க்கிறாள், ஆனால் நிலாவை காணவில்லை. இனியாவின் சத்தம் கேட்டு மடியில் இருந்து கீழே இறங்கி வந்து பார்த்த பாக்கியாவிடம் நடந்ததை சொல்லவும் பாக்கியாவும் அமிர்தாவும் அதிர்ச்சி அடைகிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு பக்கம் தேடுகிறார்கள். கேட் திறந்து இருப்பதை இனியா பார்க்காததால் அவளை பாக்கியா திட்டுகிறாள். 



அப்பேது நடிகர் சித்தார்த் நிலவுடன் பைக்கில் வந்து இறங்குகிறார். ஓடிச்சென்று நிலாவை வாங்கி கட்டியணைத்து கொஞ்சுகிறாள் அமிர்தா. “குழந்தை தான் பத்திரமா இருக்கா இல்ல, அது தான் ஒன்னும் ஆகல இல்ல, அப்புறம் ஏன் அழறீங்க” என சமாதானம் செய்கிறார் சித்தார்த். 


பாக்கியா சித்தார்த்தை வீட்டுக்குள் வர சொல்லி அழைத்து செல்கிறாள். அப்போது பாக்கியா சித்தார்த் பற்றி விசாரிக்க, அவர் நடித்துள்ள 'சித்தா' படத்தை விளம்பரம் செய்கிறார். 


இனியா காலேஜுக்கு கிளம்புகிறாள். தனது தோழிகள் எல்லாம் பாக்கியாவின் ஸ்னாக்ஸ் கேட்டார்கள் என சொல்லி எடுத்து வரச் சொல்லி விட்டு கிளம்புகிறாள். பாக்கியா ஈஸ்வரியிடம் நான் இனிமேல் காலேஜ் போக போவது இல்லை என சொல்கிறாள்.


அதைக்கேட்டு ராமமூர்த்தி, செல்வி, அமிர்தா மூவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். எவ்வளவு சமாதானம் செய்தும் பாக்கியா தன்னுடைய மாற்றி கொள்வதாக இல்லை. நான் இப்படி இருப்பது தான் நல்லது என சொல்லி விடுகிறாள் பாக்கியா.


எழில், இனியா மற்றும் பாக்கியா ரெஸ்டாரண்டில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருக்கிறார்கள். பாக்கியா இனி காலேஜ் வரப்போவதில்லை என்ற விஷயம் தெரிந்து இனியா அதிர்ச்சி அடைகிறாள்.  “நான் தான் உன்னை வரவேண்டாம் என முதலில் சொன்னேன். அதனால் தான் இனி வரமாட்டேன்னு சொல்லுறியா” எனக் கேட்கிறாள் இனியா. அப்பவும் தன்னுடைய முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்கிறாள் பாக்கியா. 


இவர்கள் பேசிக்கொண்டு இருக்க பழனிச்சாமி அங்கே வருகிறார். எழில் தான் போன் செய்து அவரை அங்கே வரவைத்துள்ளான். பழனிச்சாமி பாக்கியாவை சமாதானம் செய்ய முயற்சி செய்கிறார். அத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி (Baakiylakshmi) எபிசோட் முடிவுக்கு வந்தது.