விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) தொடரின் இன்றைய எபிசோடில் இனியாவுக்கு காய்ச்சலாக இருக்கிறது. ஆனால் பாக்கியா வீட்டில் இல்லாததால் அவளுக்கு வீட்டின் மீது பொறுப்பே இல்லை என பாக்கியா மீது கோபமாக இருக்கிறார் ஈஸ்வரி.
"என்னிடம் கேட்டு இருந்தால் நானே சொல்லி இருப்பேனே.. அவள் நிறைய பொய் சொல்லுவாள்" என செழியன் சொல்ல "அவள் பொய் சொல்லுவாளா.. அப்போ நீ சொன்னது எல்லாம் உண்மையா?" என பளார் என செழியனை அறைந்து மாலினியுடன் செழியன் இருக்கும் போட்டோ எல்லாவற்றையும் காட்டுகிறாள். அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த செழியன் பாக்கியாவிடம் தெரியாமல் செய்துவிட்டேன் என சொல்லி மன்னிப்பு கேட்கிறான்.
"நீயே போய் ஜெனிகிட்ட எல்லா உண்மையையும் சொல்லிடு. அவள் என்ன முடிவு எடுத்தாலும் நான் அவள் பக்கம் தான் நிற்பேன். தப்பு செய்யும்போது இல்லாத தயக்கம் உண்மையை சொல்லும்போது மட்டும் வருதா. உங்க அப்பாவுக்கு தப்பாமல் இருக்க. கல்யாணம் செய்தால் ஒழுக்கமாக இருக்க வேண்டும் எனத் தெரியாதா?" என பாக்கியா செழியனை வெளுத்து வாங்குகிறாள்.
ஜெனியிடம் செழியன் பேசிக்கொண்டு இருக்கும் போது ஜெனி பேசுவதைக் கேட்டு செழியன் எமோஷனலாகி அழுகிறான். "ஏன் செழியா ஒரு மாதிரி இருக்க?" என ஜெனி கேட்க எதையோ சொல்லி செழியன் சமாளித்து விடுகிறான்.
அடுத்த நாள் காலை ராமமூர்த்தி, ஈஸ்வரி மற்றும் கோபி சோபாவில் உட்கார்ந்து இருக்கிறார்கள். பாக்கியா சென்று அவர்களுக்கு காபி கொடுக்கிறாள். அந்த நேரத்தில் மாலினி வீட்டுக்கு வருகிறாள். அவளைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். அவள் என்ன சொல்லப் போகிறாள் என்ற பதட்டத்தில் ஷாக்காகி நிற்கிறாள் பாக்கியா. அத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) எபிசோட் முடிவுக்கு வந்தது.