விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி (Baakiyalakshmi ) தொடரின் இன்றைய (நவ. 14) எபிசோடில் ராமமூர்த்தி வந்து பாக்கியா மசாலா கம்பெனி நடத்தும் வீட்டை காலி செய்ய சொல்லிவிட்டார் என சொல்ல, "ஏற்கனவே போன் பண்ணி சொல்லிட்டாரு மாமா" என சொல்கிறாள் பாக்கியா. செல்வி கவலையுடன் வந்து "என்ன அக்கா பண்றது" என பாக்கியாவிடம் கேட்க "எனக்கும் ஒண்ணும் புரியால விடு செல்வி. நாம மறுபடியும் மேல வருவோம்" என செல்விக்கு தைரியம் சொல்கிறாள்.



அதைத் தொடந்து பழனிச்சாமியும் லோபிகாவும் பாக்கியாவை சந்திப்பதற்காக காத்திருக்கிறார்கள். பாக்கியா அங்கே வந்து தன்னுடைய வீட்டில் நடக்கும் பிரச்சினை பற்றி சொல்கிறாள். பழனிச்சாமி பணம் கொடுத்து உதவட்டுமா என கேட்கிறார் ஆனால் பாக்கியா "அதெல்லாம் வேண்டாம் சார். நீங்க உதவி செய்கிறேன் என சொன்னதே போதும். ஏதாவது கேட்டரிங் ஆர்டர் இருந்தா மட்டும் சொல்லுங்க" என சொல்கிறாள் பாக்கியா.


 




மசாலா கம்பெனியில் இருந்த பொருட்களை எல்லாம் கொண்டு வந்து பார்க்கிங்கில் வைக்கிறார்கள். அந்த நேரம் கோபி வந்து "என்ன இதெல்லாம் இங்கே அடுக்குனா நான் காரை எங்க பார்க் பண்றது" என சொல்லிட்டு வேகவேகமாக பஞ்சாயத்து செய்ய, ஈஸ்வரியிடம் போகிறார் கோபி. "வீட்டை காலி பண்ண சொல்லிட்டாங்களாம். பாவம் அவ எங்க எடுத்துட்டு போய் வைப்பா. அது தான் வெளியில நிறைய இடம் காலியா இருக்குல்ல" என ஈஸ்வரி பாக்கியாவுக்கு சப்போர்ட்டாக பேச "வெளியில் விட்டால் ஸ்க்ராட்ச் ஆகிடும்" என கோபி சொல்கிறார்.

பக்கத்தில் இருந்த ராதிகா "நம்ம வீட்ல இருக்கும்போது கார் வெளியே தானே இருந்தது. அப்போ ஸ்க்ராட்ச் ஆகாதா?" என நக்கலாக கேட்கிறாள். "நாமளே இங்க ஒட்டிக்கிட்டு தான் இருக்கோம். அவங்க வைச்சுக்கிட்டு போகட்டுமே. உங்களுக்கு என்ன?" என பாக்கியாவுக்கு ஆதரவாக ராதிகாவும் பேச "இவ ரொம்ப பாக்கியாவுக்கு சப்போர்ட் பண்ணறா. இரண்டு பெறுமா சேர்ந்து என்னை ஓட விட்டுடுவாங்களோ" என கோபி சொல்ல "அதெல்லாம் நடக்காது ஒண்ட வந்த அந்த ராதிகாவை நான் விரட்டி விட்டுடுவேன்" எனச்சொல்ல "அப்ப நானும் பின்னாடியே போக வேண்டியதுதான்" என கோபி மனசுக்குள்ளேயே புலம்பி கொள்கிறார்.

செழியன் ஜெனியை போய் பார்ப்பதற்காக ஜெனி வீட்டுக்கு செல்கிறான். ஜெனியின் அம்மா செழியனை திட்டி அனுப்பிடுகிறார். "இப்படி அடிக்கடி வந்து தொந்தரவு செய்தால் போலீசுக்கு போன் பண்ணிடுவேன்" எனச்சொல்லி விரட்ட, அழுது கொண்டே செழியன் வீட்டுக்கு வந்து விடுகிறான். அவன் கவலையுடன் வருவதைப் பார்த்து கோபி செழியனை சமாதானம் செய்கிறார். செழியனை கவலையுடன் பேசியதை கிச்சனில் இருந்து கேட்டு கொண்டு இருந்த பாக்கியாவும் வருத்தப்படுகிறாள். அத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி (Baakiyalakshmi ) எபிசோட் முடிவுக்கு வந்தது.