விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) தொடரின் இன்றைய எபிசோடில் பாக்கியாவை ஜெனி வீட்டுக்கு போவதற்காக ஈஸ்வரி அழைக்க பாக்கியா செல்ல மறுக்கிறாள். ஆனால் விடாப்பிடியாக "நான் போக போகிறேன் நீ என்னுடன் வந்து தான் ஆக வேண்டும்" என வற்புறுத்துகிறார் ஈஸ்வரி. ராமமூர்த்தியும் பாக்கியாவை ஈஸ்வரியுடன் சென்று வர சொல்கிறார். "நாம அப்படியே விட்டுட்டோம் என ஜெனி நினைக்க கூடாது இல்ல" என பாக்கியாவை சமாதானம் செய்து அனுப்பி வைக்கிறார்.


ஈஸ்வரி, பாக்கியா அதிர்ச்சி:


ஜெனி வீட்டுக்கு ஈஸ்வரியும் பாக்கியாவும் செல்கிறார்கள். குழந்தை தூங்கிறது என சொல்லி ஈஸ்வரியை பார்க்க அனுமதிக்கவில்லை. "பொண்ணு கோபத்தில் வீட்டுக்கு வந்தா அவளுக்கு நல்லது சொல்லி அனுப்பி வைக்கணும்" என ஜெனி அம்மாவிடம் ஈஸ்வரி சொல்ல ஜெனி அம்மா டென்ஷனாகிறார். "நடந்தது ஒன்னு சொல்ற அளவுக்கு நல்ல விஷயம் கிடையாது" என பாக்கியா ஜெனியிடம் பேச கோபத்தில் இருந்த ஜெனி "நீங்க இனிமே என்ன சொன்னாலும் நான் கேக்கபோறது இல்ல.


எப்படி நீங்க என்ன அங்க கூப்பிட வந்து இருக்கீங்க. நான் எல்லா விஷயத்திலேயும் உங்களுக்கு சப்போர்ட்டா இருந்து இருக்கேன். இனியாவுக்கு இது மாதிரி நடந்து இருந்தா இப்படி தான் அந்த பையனுக்கு சப்போர்ட்டா பேசுவீங்களா?" என ஜெனி கேட்க ஈஸ்வரியும் பாக்கியாவும் அதிர்ச்சி அடைகிறார்கள். பாக்கியா ஈஸ்வரியை அழைத்து கொண்டு வீட்டுக்கு வந்து விடுகிறாள்.


 




வீட்டில் ராமமூர்த்தி, செழியனை திட்டி கொண்டு இருக்கிறார். அப்போது ஈஸ்வரியும் பாக்கியாவும் வீட்டுக்கு வருகிறார்கள். ஈஸ்வரி அப்பவும் பாக்கியா ஜெனிக்கு எதையும் எடுத்து சொல்லவில்லை என குறை சொல்லி கொண்டு இருக்கிறார். "ஜெனி நம்ம வீட்டு பொண்ணா தான் இருந்தா. எல்லா மேலயும் உயிரா இருந்தா. நம்ம வீட்டு பொண்ணுக்கு ஒரு பிரச்சினைனா இப்படி தான் சொல்லுவோமா. நம்ம போய் கூப்பிட்டா உடனே ஜெனி வரணுமா? இவன் பண்ண தப்புக்கு தண்டனையை அனுபவிக்கட்டும். முடியலைன்னா பழகிகட்டும். எந்த சூழ்நிலையிலும் இவன் கூட வந்து வாழுன்னு நான் ஜெனிகிட்ட சொல்லவே மாட்டேன். இந்த மாதிரி பண்ணறவன் என்னோட பையனே இல்லை. அதை சொல்லவே நான் வெட்கப்படுறேன்" என கோபமாக திட்டிவிட்டு சென்று விடுகிறாள்.

கணேஷ் எல்லாத்துக்கும் ஒரு முடிவு வர இன்னும் இருபத்தி ஐந்து நாட்கள் தான் இருக்கிறது என நாட்களை எண்ணி கொண்டு இருக்கிறான். அதை பார்த்து கணேஷின் அம்மாவும் அப்பாவும் சங்கடப்படுகிறார்கள்.

வீட்டில் பாக்கியா செல்வியிடம் வளையல் ஒன்றை கொடுத்து அடமானம் வைத்து வரச் சொல்கிறாள். அப்போது ராமமூர்த்தி எங்கோ வெளியில் சென்று வீட்டுக்கு வருகிறார். பாக்கியாவை அழைத்து "நாம வேற வீடு பார்க்கலாம்" என்கிறார் அதற்கு பாக்கியாவும் "சரி மாமா" என சொல்லிவிடுகிறாள். அத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட் முடிவுக்கு வந்தது.