Sahana Sridhar Death: விஜய் டிவி சீரியல் நடிகர் மாரடைப்பால் மரணம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

பல முக்கிய சீரியல்களில், குணச்சித்திர வேடத்தில் நடித்து பிரபலமானவர் சஹானா ஸ்ரீதர் இவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துவிட்டதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Continues below advertisement

வெள்ளித்திரை பிரபலங்களை விட  சின்னத்திரை பிரபலங்கள் தான் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சியமானவர்களாக உள்ளனர். காரணம் திரைப்படங்களை விட சீரியல்கள் மூலம் சின்னத்திரை பிரபலங்களை ரசிகர்கள் தினமும் பார்க்கின்றனர். எனவே சின்னத்திரை பிரபலங்கள் பற்றி எந்த தகவல் வெளியானாலும் அது வைரலாகி விடுகிறது.

Continues below advertisement

அந்த வகையில், ஏராளமான சீரியல்களில் நடித்து பிரபலமான ஸ்ரீதர் சுப்பிரமணியம், மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ள தகவல் வெளியாகி உள்ளது. வங்கியில் பணியாற்றிய இவர் ஏராளமான சீரியல்களிலும் நடித்துளளார்.  பாலு மகேந்திரா மற்றும் கே பாலசந்தர் போன்ற ஜாம்பவான்களுடன் பணியாற்றியுள்ளார்.

இவர் தன்னை பற்றி ஒரு நேர்காணலில் கூறும் போது, "நான் ஒரு குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானேன், மகேந்திரன் சாரின் அழியாத கோலங்கள் திரைப்படத்தில் நடித்துள்ளேன்.  பின்னர்” தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ளேன். வாசுதேவன் நாயர் இயக்கிய சில மலையாள படங்களிலும் நடித்திருக்கிறேன். கே பாலசந்தர் இயக்கிய தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்கும் வாய்ப்பை எனக்கு கொடுத்தார்.


அதன்படி, சிந்து பைரவி படத்தின் தொடர்ச்சியான சஹானா சீரியலில் நடித்து பிரபலமானதன் காரணமாகவே என்னை அனைவரும் சஹானா ஸ்ரீதர் என அழைத்தனர். சில தெலுங்கு மற்றும் தமிழ் படங்களிலும் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ள ஸ்ரீதர், தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் வள்ளியின் வேலன் என்கிற தொடரில் நடித்து வருகிறார். அதே போல் அன்ஷிகா மற்றும் அர்னவ் விஜய் டிவியில் நடித்து வந்த 'செல்லமா' தொடரிலும் நடித்திருந்தார்.

62 வயதாகும் இவருக்கு திடீர் என மாரடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, அவசர அவசரமாக RMD நர்சிங் ஹோமில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் மருத்துவர்கள் எவ்வளவோ போராடியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவு தற்போது சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Continues below advertisement
Sponsored Links by Taboola