விஜய் டிவியின் செல்லப் பிள்ளையான தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே, ஏற்கனவே பிரவீன் என்பவரை திருமணம் செய்து கொண்டு சில வருடத்திலேயே அவரிடம் இருந்து பிரிந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 2ஆவது திருமணம் செய்து கொண்டார். 

Continues below advertisement


பிரியங்காவின் 2-ஆவது திருமணமும் காதல் திருமணம் தான். நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க பிரியங்கா இலங்கை சென்ற போது வசியின் நட்பு கிடைத்துள்ளது. பின்னர் அதுவே காதலாக மாற இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இது வசிக்கும் இரண்டாவது திருமணம் ஆகும். பிரியங்காவை விட, 10 - 12 வயது மூத்தவர் வசி என்பதால்... வயதானவரை பிரியங்காதிருமணம் செய்து கொண்டதாக அவர் மீது விமர்சனம் முன்வைக்கப்பட்டது. 




ஆனால் இதையெல்லாம் பிரியங்கா பெரிதாக எடுத்து கொள்ளவே இல்லை. இவரது திருமணம் எளிமையான முறையில் நடந்ததால், குறிப்பிட்ட நண்பர்கள் மற்றும் பிரபலங்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. திருமணம் முடிந்த கையேடு பிரியங்கா - வசி இருவரும், அமீர் - பாவனி திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்தனர். அதே போல்  வெளிநாட்டிற்கு ஹனிமூனுக்கு சென்று, அங்கு எடுத்த புகைப்படங்களை எல்லாம் பிரியங்கா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார்.


இந்த நிலையில் தான் பிரியங்காவின் கணவர் வசி தனது இன்ஸ்டாவில் வருத்தத்துடன் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில், பிரியங்காவுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து மிஸ்ஸஸ் பிரியங்கா தேஷ்பாண்டே சச்சி எப்ப வர்ரீங்க என்று கேட்டு பதிவு ஒன்றை போட்டுள்ளார். இந்த பதிவின் மூலமாக இருவரும் தனித்தனியாக இருப்பது தெளிவாக தெரிகிறது. இதை வைத்து நெட்டிசன்கள் பலரும் திருமணமான 2 மாதத்திலேயே வசி மற்றும் பிரியங்கா இருவரும் பிரிந்து இருக்கிறார்களா? என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.