Siragadikka Aasai Today June 26 :  விஜய் டிவியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியல் இன்றைய எபிசோடில் ஸ்ருதியின் அம்மா 5 லட்சத்திற்கான செக்குடன் அண்ணாமலை வீட்டுக்கு வந்துள்ளார். 



 

"ஸ்ருதியின் அம்மா :  மாடியில் ரூம் கட்ட முடிவு எடுத்துள்ளது பற்றியும் அதற்காக 5 லட்சம் பணம் தேவை படுவது பற்றியும் ஸ்ருதி சொன்னாள். இந்த பணம் உங்களுக்கு உதவியாக இருக்கும் என இந்த செக்கை ஸ்ருதியின் அப்பா கொடுத்து அனுப்பினார்" என்கிறாள். 

 

 


 

"விஜயா : உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு. அதனால தான் நாங்க கேட்கமாலே பணத்தை கொடுக்குறீங்க. 

 

ஸ்ருதியின் அம்மா : இந்த வீடு கட்ட கூட ஸ்ருதி அப்பா தான் லோன் சாங்க்ஷன் பண்ணி கொடுத்தார். இப்போ நீங்க ரிடையர் ஆகிட்டிங்க. அதனால நம்ம குடும்பம் தானே என உங்களுக்கு இதை கொடுக்க வந்தேன்." 

 

மனோஜ் : அப்ப பணத்தை எங்கேயும் ஏற்பாடு பண்ண வேண்டியதில்லை. மாசாமாசம் வீட்டுக்கு பணமும் கொடுக்க வேண்டாம். 

 

"முத்து : யார் வீட்டுக்கு யார் பணம் கொடுக்குறது. அவங்களுக்கு வேணும்னா அவங்க பொண்ணுக்கும் மருமகனுக்கும் இடம் வாங்கி வீடு கட்ட பணம் கொடுக்க வேண்டியது தானே.

 

விஜயா : அப்போ எல்லாரையும் வீட்டை விட்டு அனுப்பிட்டு நீ மட்டும் இந்த வீட்ல மொத்தமா உட்கார்ந்துக்கலாம்னு நினைச்சியா?"என்கிறாள்

 

மீனா முத்துவுக்கு சப்போர்ட் பண்ணி பேச அவளையும் அசிங்க படுத்துகிறாள் விஜயா. 

 

"மனோஜ் : நீயே இந்த வீட்ல எல்லா முடிவையும் எடுப்பியா? அப்பாவுக்கு அடுத்து எல்லாம் உரிமையும் எனக்கு தான் இருக்கு. நீ மட்டும் இந்த வீட்டு மேல உரிமை கொண்டாடுவியா? சுயநலவாதி " என்கிறான். 

 

 

அதை கேட்டு ஆத்திரமடைந்த முத்து எகிறிக்கொண்டு போய் மனோஜை அடிஅடியென அடிக்கிறான். முத்துவை அனைவரும்  சேர்ந்து தடுக்கிறார்கள். அண்ணன் தம்பிக்குள் சண்டை நடப்பதை பார்த்து ஸ்ருதி அம்மா மனசுக்குள் சந்தோஷப்படுகிறார். 

 

"முத்து : யாருடா சுயநலவாதி. நீ தான் பணத்தை எடுத்துக்கிட்டு ஓடுன. அதனால தான் எங்கப்பா இப்படி கஷ்டப்படுறார். பண்ணறது எல்லாம் நீ பண்ணிட்டு என்னை சுயநலவாதின்னு சொல்றியா" என்கிறான்.

 

"விஜயா: வீட்டுக்கு வந்தவங்க முன்னாடி ஏன் இப்படி அசிங்க படுத்துறீங்க?அவங்க மனசு எப்படி கஷ்டப்படும்.

 

முத்து : அந்த அம்மா என்ன நடக்கணும் என ஆசைப்பட்டு இங்க வந்தார்களோ அது நடந்துடுச்சு. அவங்க ஏன் மனசு கஷ்டப்பட போறாங்க" என்கிறான். 

 


 

 

ஸ்ருதியின் அம்மா : எங்க குடும்பமா நினச்சு தான் உதவி செய்ய வந்தேன். நான் இங்க வந்து இருக்கவே கூடாது. நான் கிளம்புறேன்.

 

"அண்ணாமலை : விஜயாவோட அப்பா கீழ் வீடு மட்டும் தான் கொடுத்தாரு. நான் தான் இந்த வீட்டை கட்டினேன். இப்போ ஒரு ரூம் கட்டணும் என ஆசைப்பட்டேன். அது என்னால முடியல. எனக்கு வயசாயிடுச்சு. என்ன நடக்குமோ அது நடக்கட்டும்" என மனசு வேதனை பட்டு பேசுகிறார். அதை பார்த்து முத்து வருத்தப்படுகிறான். 

 

அப்பா சங்கடப்பட்டு பேசுவதை நினைத்து முத்து குடித்துவிட்டு வீட்டுக்கு வருகிறான். 

 

"மீனா : நீங்க எந்த நிலைமையில வந்து இருக்கீங்க என எனக்கு தெரியும். குடிச்சுட்டு வருவீங்கன்னு ஆனா கொஞ்சம் சீக்கிரமா வருவீங்க என நினச்சேன்" என்கிறாள். 

 

அப்போது அண்ணாமலை ரூமில் இருந்து முத்து வீட்டுக்கு வந்துள்ள நிலையை பார்க்கிறார். அத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட் முடிவுக்கு வந்தது.