Veera Serial Today June 14: அகோரியாக மாறிய மாறன்.. காலில் விழ சொன்ன வீரா.. வீரா சீரியல் அப்டேட்! 

Veera Serial Today June 14th: மாறன் கடையில் வேலை செய்து கொண்டிருக்க, அங்கு வந்த வீரா தனது காலைக்காட்டி “என்னமோ என் கால்ல விழுந்து நன்றி சொல்லணும்னு சொன்னேயே?” என்று கேட்கிறாள்.

Continues below advertisement

Veera Serial Today Written Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வீரா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ராமசந்திரன் மாறனை அடிக்கப் பாய, வீரா கையைப் பிடித்து தடுத்து நிறுத்திய நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 

Continues below advertisement

அதாவது மாறன் சரக்கடித்துக் கொண்டு வீரா ராமச்சந்திரனை தடுத்து நிறுத்திய விஷயங்களை நினைத்துப்பார்த்து அவளுக்கு போன் செய்து “முதல் முறையா என்னை அடிக்க ஓங்கின என் அப்பாவோட கை என் மேல படாமல் இருந்திருக்கு.. அதுக்கு காரணம் நீ தான்” என்று நன்றி சொல்கிறான். 

“இதுக்கு முன்னாடி எல்லாம் ஒருத்தி இருந்தா, அவ இருக்க வரைக்கும் என் அப்பா என்னை அடிச்சது கிடையாது. நானும் இந்த மாதிரி மாறி இருக்க மாட்டேன்” என்று தன்னுடைய அம்மா பற்றி பீல் செய்து பேசுகிறான். மறுநாள் காலையில் மாறன் கடையில் வேலை செய்து கொண்டிருக்க, அங்கு வந்த வீரா தனது காலைக்காட்டி “என்னமோ என் கால்ல விழுந்து நன்றி சொல்லணும்னு சொன்னேயே?” என்று கேட்க, மாறன் “நீ சேர்த்துப் பேசுற, நான் அப்படியெல்லாம் சொல்லி இருக்க மாட்டேன்” என்று சொல்கிறான். 

இதையடுத்து ராகவன் டல்லாக உட்கார்ந்திருக்க, மாறன் “என்னடா ஆச்சு?” என்று கேட்க “கல்யாணமாகி 10 நாளுக்கு மேல ஆக போகுது, ஆனால் கண்மணி என்னை கிட்ட கூட நெருங்க விட மாட்டுறா.. எல்லாத்துக்கும் நேரம் வரணும்னு சொல்றா” என்று கவலைப்பட, மாறன் அதுக்கு ஒரு ஐடியா பண்ணுவோம் என்று சொல்கிறான். 

பிறகு ராமசந்திரன் வீட்டில் எல்லாரும் உட்கார்ந்து காபி குடித்துக் கொண்டிருக்க, வீட்டுக்கு வந்த வீரா ராகவனிடம் ஒரு டாக்குமெண்டைக் கொடுத்து ராமசந்திரன் சார் கையெழுத்து வாங்கிட்டு வர சொன்னதாக சொல்கிறாள். பிறகு “கடைக்கா போற?” என்று ராகவன் கேட்க, வீரா ஆமாம் என்று சொல்ல, “நானும் கடைக்கு தான் போறேன். சேர்ந்து போகலாம்” என்று சொல்லி வெளியே வர அகோரி வேஷத்தில் தனது நண்பனுடன் வந்து நிற்கிறான் மாறன். 

முதலில் அடையாளம் காணாத ராகவன் “யார்ரா நீ வெளியே போ” என்று சத்தம் போட, ராகவன் காதருகே சென்று “டேய் நான் தான், உன்னையும் அண்ணியையும் சேர்த்து வைக்க தான் இப்படி வந்திருக்கேன்” என்று சொல்ல, ராகவன் “சாமி நீங்களா?” என்று காலில் விழுந்து பெர்பாமென்ஸைத் தொடங்க, வீரா சந்தேகத்துடன் பார்க்க, மாறன் “அந்தப் பொண்ணு ஏன் என் காலில் விழல?” என்று கேட்கிறான். 

ராகவன் காலில் விழ சொல்ல, வீரா “மாமா அது மாறன் தானே?” என்று கேட்க, ராகவன் “ஆமாம் மா, என்னையும் உன் அக்காவையும் சேர்த்து வைக்க தான் வந்திருக்கான், காட்டிக் கொடுத்துடாதே.. காலில் விழு” என்று சொல்ல, வீராவும் பெர்பாமன்ஸ் செய்கிறாள். பிறகு வாங்க சாமி என்று உள்ளே அழைத்துச் செல்ல, வள்ளி “யார்ரா இது பிச்சைக்காரனை எல்லாம் உள்ள கூட்டிட்டு வந்திருக்கீங்க?” என்று சத்தம் போடுகிறாள். 

அகோரி வேடத்தில் இருக்கும் மாறனைப் பார்த்து “இந்த மூஞ்ச எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே” என்று சொல்ல, மாறன் “இந்த வீட்டில் புதுசா கல்யாணமான ஜோடி இன்னும் சேராமல் இருக்கு.. அவங்க சீக்கிரமா சேரணும்” என்று சொன்னதும் வள்ளிக்கு வந்திருப்பது மாறன் என்று தெரிந்து விட அவனை அடிக்கத் துரத்துகிறாள். இப்படியான நிலையில் இன்றைய வீரா சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.

மேலும் படிக்க: Maharaja Movie Review : விஜய் சேதுபதி 50 : குடும்பத்தோட பாக்கலாமா? மகாராஜா விமர்சனம் இதோ (ஸ்பாய்லர் இல்லாமல்)

Siragadikka Aasai serial Today June 14 : சிக்கலில் இருக்கும் ரோகிணி சிட்டியிடம் கேட்கும் உதவி என்ன? சிறகடிக்க ஆசையில் இன்று

Continues below advertisement
Sponsored Links by Taboola