சின்னத்திரை ரசிகர்களை காலை முதல் இரவு வரை என்டர்டெயின் செய்வதில் முக்கிய பங்கு வகிப்பது சீரியல்கள் தான். விதவிதமான வகைவகையான சீரியல்களை ஒவ்வொரு தொலைக்காட்சி சேனலும் போட்டிபோட்டு ஒளிபரப்பி வருகிறது. ஒரே நேரத்தில் பல சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்களை மாறி மாறி பார்க்கும் அளவுக்கு ஒரு சில சின்னத்திரை ரசிகர்கள் கெட்டிக்காரர்கள். எந்த அளவுக்கு அவர்களை சீரியல்கள் ஆக்கிரமித்துள்ளன என்பதை இதன் மூலம் அறிய முடிகிறது. 


 




டி.ஆர்.பி ரேட்டிங் தான் சீரியல்களை மக்கள் எந்த அளவுக்கு விரும்புகிறார்கள் என்பதன் அளவுகோலாக இருந்து வருகிறது. அந்த வகையில் டி.ஆர்.பி ரேட்டிங்கில் முன்னணி இடத்தை பிடிக்க வேண்டும் என ஒவ்வொரு சேனலும் கடுமையாக போட்டியிடுகிறது. டி.ஆர்.பி ரேட்டிங் நிலவரம் ஒவ்வொரு வாரமும் மாறுபடும். ஒரு சீரியல் பார்வையாளர்கள் மத்தியில் சென்றடைய பல்வேறு காரணங்கள் உள்ளன. ஒளிபரப்பாகும் நேரம், நடிகர் நடிகைகள், கதைக்களம், சீரியலுக்கான புரொமோஷன் இப்படி பலவற்றின் அடிப்படையில் தான் அவை பார்வையாளர்களை கவர்கின்றன. அதிலும் குறிப்பாக முன்னதாக வெளியாகும் ப்ரோமோ பார்வையாளர்களை வெகுவாக கவர்கிறது. 


அந்த வகையில் சீரியல்களின் கடந்த வாரத்திற்கான டி.ஆர்.பி ரேட்டிங் பட்டியல் வெளியாகியுள்ளது. 


ஒவ்வொரு வாரமும் முன்னணி இடத்தை யாருக்குமே விட்டுக்கொடுக்காமல்  சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து இருப்பது சன் டிவி தான். அந்த வகையில் கடந்த வார டி.ஆர்.பி ரேட்டிங் வரிசையிலும் முதல் ஐந்து இடங்களை சன் டிவி தான் பெற்றுள்ளது. 11.36 புள்ளிகளுடன் சிங்கப்பெண்ணே, 10.33 புள்ளிகளுடன் கயல் மற்றும் எதிர்நீச்சல், 9.59 புள்ளிகளுடன் வானத்தை போல, 8.96 புள்ளிகளுடன் இனியா, 8.34 புள்ளிகளுடன் சுந்தரி சீரியலும் இடம்பெற்றுள்ளன. 


 



சன் டிவிக்கு அடுத்தபடியாக முன்னணியில் இருக்கும் சேனல் என்றால் அது விஜய் டிவி தான். விஜய் டிவியில் பல பிரபலமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் ஆறாவது இடத்தை 8.02 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் உள்ளது 'சிறகடிக்க ஆசை' சீரியல். அடுத்தபடியாக 7.32 புள்ளிகளுடன் பாக்கியலட்சுமி, 6.50 புள்ளிகளுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை, 6.12 புள்ளிகளுடன் ஆஹா கல்யாணம் சீரியல் இடம்பெற்றுள்ளது.  


சன் டிவி மற்றும் விஜய் டிவி போட்டிபோட்டு டி.ஆர்.பி ரேட்டிங் வரிசையில் இடம்பெற்றாலும் இந்த சேனல்களுடன் கடுமையாக போட்டியிடுகிறது ஜீ தமிழ் தொலைக்காட்சி. கார்த்திகை தீபம் தொடர் 5.51 பெற்று அடுத்த இடத்தில் இருக்கிறது. 


இந்த டி.ஆர்.பி ரேட்டிங் பட்டியல் கடந்த வாரத்திற்கானது மட்டுமே. இது வரும் வாரங்களில் மாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.