சின்னத்திரை ரசிகர்களே நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த 31வது வாரத்துக்கான டிஆர்பி ரேட்டிங் பட்டியல் வெளியாகிவிட்டது. வழக்கம் போல இந்த லிஸ்டிலும் சன் டிவி மற்றும் விஜய் டிவி இடையே தான் மோதல் நடைபெற்று முதல் 10 இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளன. அந்த வகையில் எந்தெந்த சீரியல் என்னென்ன இடத்தில் எத்தனை புள்ளிகளுடன் எந்த இடத்தை பிடித்துள்ளன என்பதை பார்க்கலாம் வாங்க. இந்த வாரம் ஒரு அதிரடி மாற்றம் நடந்துள்ளது. அது என்ன என்பதை தெரிந்து கொள்ள கடைசி வரை படியுங்கள் :
இந்த வாரமும் அதே 10வது இடத்தை 5.77 புள்ளிகளை பெற்று தக்க வைத்துள்ளது விஜய் டிவியின் 'சின்ன மருமகள்' சீரியல். கடந்த வாரம் 8வது இடத்தில் இருந்த 'பாண்டியன் ஸ்டோர்ஸ் :தந்தை சொல் மிக்க மந்திரம்' இல்லை சீரியல் 6.79 புள்ளிகளை பெற்று 9ம் இடத்தை பிடித்துள்ளது.
ஆனால் சன் டிவியில் 'சுந்தரி' சீரியல் 7.16 புள்ளிகளை பெற்று ஒரு படி முன்னேறி 8வது இடத்தை பிடித்துள்ளது. 7வது இடத்தை 7.43 புள்ளிகளுடன் விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் பிடிக்க 7.44 புள்ளிகளுடன் 6வது இடத்தை சன் டிவியில் 'மல்லி' சீரியல் இடம்பிடித்துள்ளது.
வானத்தை போல, மருமகள், கயல் என அடுத்தடுத்த இடங்களை சன் டிவி கைப்பற்றியுள்ளது. 5வது இடத்தில் 7.65 புள்ளிகளுடன் 'வானத்தை போல', 8.27 புள்ளிகளுடன் 4வது இடத்தில் 'மருமகள்', 8.76 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தை கயல் சீரியல் கைப்பற்றியுள்ளது.
அடுத்த இடமான இரண்டாவது இடத்தில் தான் ட்விஸ்ட் நடைபெற்றுள்ளது. சீரியல் தொடங்கிய நாளில் இருந்து முதல் இடத்தை விடாப்பிடியாக தக்க வைத்து வந்த 'சிங்கப்பெண்ணே' சீரியல் கடந்த சில வாரங்களாக முதல் இடத்தை விட்டு கொடுத்து பின்தங்கி வந்தது. கடந்த வாரத்தில் நடைபெற்ற விறுவிறுப்பான கதைக்களத்தால் மீண்டும் தன்னுடைய முதல் இடத்தை கைப்பற்றி விஜய் டிவியின் 'சிறகடிக்க ஆசை' சீரியலை இரண்டாவது இடத்துக்கு தள்ளிவிட்டது 'சிங்கப்பெண்ணே' சீரியல். அதனால் 8.86 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்துக்கு விஜய் டிவியின் 'சிறகடிக்க ஆசை' சீரியல் செல்ல 9.11 புள்ளிகளை பெற்று முதல் இடத்தை கம்பீரமாக பெற்றுள்ளது சன் டிவியின் 'சிங்கப்பெண்ணே' சீரியல்.
இந்த புள்ளி விவரங்கள் இந்த வாரத்துக்கானது மட்டுமே. வரும் வாரத்தில் இந்த டிஆர்பி ரேட்டிங் மாற வாய்ப்புகள் உள்ளது. அது என்னென்ன என்பதை வரும் வாரம் பார்க்கலாம்.