சின்னத்திரை ரசிகர்களின் ஃபுல் டைம் என்டர்டெய்னர் என்றால் அது எந்த ஒரு சந்தேகமும் இன்றி தொலைக்காட்சி தான். அதிலும் குறிப்பாக குடும்ப தலைவிகளுக்கு கிடைத்த மிக பெரிய வரப்பிரசாதம் தான் அதில் ஒளிபரப்பாகும் சீரியல்கள். காலை முதல் இரவு வரை அவர்களை நாள் முழுக்க ஆக்ரமித்து வைக்க ஒவ்வொரு சேனலும் போட்டி போட்டு கொண்டு சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அப்படி ஒளிபரப்பாகும் சீரியல்களில் எவை மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பதை வாரம் தோறும் வெளியாகும் டிஆர்பி ரேட்டிங் மூலம் தெரிந்து கொள்ளலாம். அந்த வகையில் 30வது வாரத்துக்கான டிஆர்பி ரேட்டிங் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.
30 வாரத்துக்கான டிஆர்பி ரேட்டிங் பட்டியலில் முதல் 10 இடத்தை பிடித்த சீரியல்களை அதன் புள்ளிவிவரங்களோடு பார்க்கலாம் :
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'சின்ன மருமகள்' சீரியல் தொடர் 5.73 புள்ளிகளுடன் பத்தாவது இடத்தில் உள்ளது.
சன் டிவியின் 'சுந்தரி' சீரியல் 6.62 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்தை பிடிக்க மீண்டும் விஜய் டிவியில் இடையில் புகுந்து ஆட்டத்தை கலைக்கிறது. 6.88 புள்ளிகளுடன் எட்டாவது இடத்தில் விஜய் டிவியின் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் : தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை' சீரியல் உள்ளது. தொடர்ந்து ஏழாவது இடத்தில் 7.03 புள்ளிகளுடன் சன் டிவியின் 'மல்லி' சீரியலும் மற்றும் 7.56 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் 'வானத்தை போல' சீரியலும் இடம்பெற்றுள்ளது.
கடந்த வாரம் மூன்றாவது இடத்தில் இருந்து இந்த முறை பின்தங்கி ஐந்தாவது இடத்தை 7.75 புள்ளிகளை பெற்று இடம்பிடித்துள்ளது விஜய் டிவியின் 'பாக்கியலட்சுமி' தொடர். ஐந்தாவது இடத்தில் இருந்து நான்காவது இடத்தில் 8.04 புள்ளிகளுடன் சன் டிவியின் 'மருமகள்' சீரியல் முன்னேறியுள்ளது. முதல் மூன்று இடங்களில் 8.40 புள்ளிகளுடன் சன் டிவியின் 'கயல்' சீரியல் மூன்றாவது இடத்தையும் 8.67 புள்ளிகளுடன் 'சிங்கப்பெண்ணே' சீரியல் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. கடந்த வாரம் இந்த தொடர் நான்காவது இடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் இடத்தை கடந்த சில வாரங்களை போலவே இந்த வாரமும் விஜய் டிவியின் 'சிறகடிக்க ஆசை' சீரியல் தான் 9.18 புள்ளிகளை பெற்று தக்க வைத்துள்ளது.
இந்த டிஆர்பி ரேட்டிங் 30வது வாரத்திற்கானது மட்டுமே. இதில் என்னென்ன மாற்றங்கள் அடுத்த வாரம் நடைபெற உள்ளது? எந்த சீரியல் முதல் இடத்தை பிடிக்க போகிறது என்பதை வரும் வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங் தான் முடிவு செய்யும். அது என்ன என்பதை வரும் வாரங்களில் பார்க்கலாம்.