Siragadikka Aasai serial Aug 2 :  விஜய் டிவியின் 'சிறகடிக்க ஆசை' சீரியலின் இன்றைய எபிசோடில் முத்துவும் மீனாவும் பேசி கொண்டு இருக்கிறார்கள். அப்போது முத்து கிரிஷுக்காக வாங்கி வந்த ட்ரெஸ்ஸை காட்டுகிறான். இருவரும் அவனை ஆபரேஷன் ஆனதற்கு பிறகு போய் பார்க்கவே இல்லை அதனால் ஒரு முறை போய் பார்த்துவிட்டு வரலாம் என பேசி கொண்டு இருக்கிறார்கள். 


 




ரவியை பார்ப்பதற்காக ஸ்ருதியின் அம்மா ரெஸ்டாரெண்டுக்கு வருகிறார். சொந்தமா ஒரு ரெஸ்டாரெண்ட் ஆரம்பிக்க வேண்டும் என்பதற்காக குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளி போட்டுள்ளதாக ஸ்ருதி சொன்னதாக அவளுடைய அம்மா சொல்கிறாள். "எங்க கிட்ட பணம் கேட்டா நாங்க தரப்போறோம். அதை விட்டுட்டு எதுக்காக குழந்தையை தள்ளி போட வேண்டும்" என சொல்லி பிளாங்க் செக்கை கொடுக்கிறார். ரவி எவ்வளவு சொல்லியும் கேட்காமல் "நீங்களும் என்னுடைய பையன் மாதிரி தான். வைச்சுக்கோங்க மாப்பிள்ளை" என சொல்லி செக்கை கொடுத்துவிட்டு போகிறார். கோபத்தில் ரவி ஸ்ருதியை பார்க்க ஸ்டுடியோவுக்கு போகிறான். 


 


ரவி : நம்ம வீட்ல நடக்குற விஷயத்தை உங்க வீட்ல சொல்லாத என எவ்வளவு தடவை தான் சொல்றது. ரெஸ்டாரெண்ட் ஆரம்பிக்க நான் தான் லோகானுக்கு ஏற்பாடு பண்ணிக்கிட்டு இருக்கேன் இல்ல. நீ ஏன் உங்க அம்மாகிட்ட இதை பத்தி சொன்ன?


 


ஸ்ருதி : குழந்தை  பத்தி பேசுனாங்க... அதனால ரெஸ்டாரெண்ட் ஆரம்பிச்ச பிறகு தான் என சொல்லி வச்சேன். அது தான் அவங்க செக் கொண்டு வந்து கொடுத்து இருக்காங்க. அவங்க கொடுத்தா என்ன? அப்படி உனக்கு வேண்டாம்னா அவங்க கிட்டயே போய் கொடுக்க வேண்டியது தானே. எதுக்கு என்கிட்டே வந்து சண்டை போடுற?" என கத்திவிட்டு சென்று விடுகிறாள்.



ரோகிணி கிரிஷ் பிறந்தநாளுக்காக அம்மா வீட்டுக்கு வருகிறாள். அவளை பார்த்ததும் கிரிஷ் மிகவும் சந்தோஷப்படுகிறான். கேக் வெட்ட தயாராக இருக்கும் போது முத்துவும் மீனாவும் கிரிஷுக்காக வாங்கிய ட்ரெஸ்ஸை கொடுக்க வருகிறார்கள். அங்கு வந்த பிறகுதான் கிரிஷ் பிறந்தநாள் என்பது அவர்களுக்கு தெரிய வருகிறது. முத்துவையும் மீனாவையும் பார்த்து ரோகிணி ஒளிந்து கொள்கிறாள். 


 




கேக் வெட்ட முத்துவும் மீனாவும் தயார் செய்ய கிரிஷ் ரோகிணியை காணவில்லையே என தேடுகிறான். அவன் அத்தை... என சொல்ல முத்துவும் மீனாவும் ரோகிணியின் அம்மாவிடம் ஏதோ பேச வேண்டும் என சொல்லி வெளியே அழைத்து செல்கிறார்கள்.



முத்து : உங்க பொண்ணுக்கு அப்படி என்னமா? உங்க இரண்டு பேரையும் இந்த தவிக்க விட்டு வேலை முக்கியம் என அங்கேயே இருக்காங்க. கிரிஷ் எப்படி ஏங்கி போய் இருக்கான் பாருங்க. நீங்க போன் பண்ணி குடுங்க நான் அவங்க கிட்ட பேசுறேன். 


 


மீனா : நீங்க சத்தம் போட்டு பேசுவீங்க. அதனால நான் பக்குவமா பேசுறேன். நீங்க போன் பண்ணி போடுங்கம்மா. அத்தையை தான் அவன் அம்மாவா நினைக்குறான்" என சொல்கிறாள். 


 


ரோகிணியின் அம்மா கிரிஷ் பிறப்பு பற்றின உண்மையை சொல்கிறார். "என்னோட பொண்ணோட பையன் தான் கிரிஷ். சின்ன வயசுலேயே வலுக்கட்டாயபடுத்தி அவளை வயசு கூட உள்ள ஒருத்தருக்கு கல்யாணம் பண்ணி வைச்சுட்டேன். கிரிஷ் பிறந்த கொஞ்ச நாளிலேயே அந்த ஆளு இறந்து போயிட்டாரு. அதனால அவளுக்கு இங்க வர பிடிக்காது" என ரோகிணியின் அம்மா சொல்ல அதை கேட்டு முத்துவும் மீனாவும் அதிர்ச்சி அடைகிறார்கள். இது தான் இன்றைய எபிசோட் கதைக்களம்.