கிராமம் முதல் நகரம் வரை உள்ள மக்களின் அன்றாட வாழ்வில் மிக முக்கியமான பங்கு வகிப்பது தொலைக்காட்சி. என்னதான் திரைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்தாலும் தினசரி ஒளிபரப்பாகும் சீரியல்கள் மிக முக்கியமான இடத்தை பிடித்துள்ளது.
அந்த வகையில் எக்கச்சக்கமான தொலைக்காட்சி சேனல்கள் போட்டி போட்டு கொண்டு சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அதில் எந்தெந்த சீரியல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது என்பதை டிஆர்பி ரேட்டிங் மூலம் அறிந்து கொள்ள முடியும். அந்த வகையில் 29வது வாரத்துக்கான டிஆர்பி ரேட்டிங் பட்டியல் வெளியாகியுள்ளது.
இந்த போட்டி சன் டிவி மற்றும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் இடையே தான் நடைபெற்று வருகின்றன. பல வாரங்களாக முதல் இடத்தை தக்க வைத்து வந்த சன் டிவியின் இடத்தை கடந்த சில வாரங்களாக விஜய் டிவி தட்டி பறித்துள்ளது.
விஜய் டிவியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியல் யாருமே நெருங்க முடியாத அளவுக்கு 9.84 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது.
வழக்கம் போல இரண்டாவது இடத்தை 8.81 புள்ளிகளுடன் சன் டிவியின் 'கயல்' சீரியல் பிடித்துள்ளது.
மீண்டும் விஜய் டிவி களத்தில் இறங்கி மூன்றாவது இடத்தில் 8.67 புள்ளிகளுடன் 'பாக்கியலட்சுமி' முன்னிலை இடத்தை பிடித்து வருகிறது.
கடந்த சில மாதங்களாக முதல் இடத்தை தக்க வைத்து வந்த சன் டிவியின் 'சிங்கப்பெண்ணே' சீரியல் படிப்படியாக குறைந்து 8.07 புள்ளிகளுடன் நான்காவது இடத்தை பிடித்துள்ளது.
சன் டிவியில் புதிதாக தொடங்கப்பட்ட 'மருமகள்' சீரியல் 8.05 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும் 7.35 புள்ளிகளுடன் 'வானத்தை போல' ஆறாவது இடத்திலும் உள்ளது.
விஜய் டிவியின் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் - தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை' சீரியல் 7.30 புள்ளிகளுடன் ஏழாவது இடத்திலும் சன் டிவியின் 'சுந்தரி' சீரியல் 7.24 புள்ளிகளுடன் எட்டுவது இடத்தையும் பிடித்துள்ளது.
6. 92 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்தில் சன் டிவியின் 'மல்லி' சீரியல் மற்றும் பத்தாவது இடத்தில் 5.73 புள்ளிகளுடன் விஜய் டிவியின் 'சின்ன மருமகள்' சீரியலும் இடம்பிடித்துள்ளன.
இந்த புள்ளிவிவரங்கள் 29வது வாரத்திற்கானது மட்டுமே. வரும் வாரத்தில் எந்தெந்த சீரியல் என்னென்ன புள்ளகளுடன் எந்த இடத்தில் உள்ளன என்பதை வரும் வாரம் வெளியாகும் டி. ஆர்.பி ரேட்டிங் மூலம் தெரிந்து கொள்ளலாம்.