விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதால் மிகவும் பரபரப்பாக நகர்கிறது.


இன்றைய எபிசோடில் ஹேமாவை கடத்திய காரணத்திற்காக வெண்பாவை போலீஸ் கைது செய்கிறது. வெண்பாவின் அம்மா ஷர்மிளா எவ்வளவு சொல்லியும் கேட்காமல் போலீஸ் வெண்பாவை அழைத்து செல்வது போல கனவு காண்கிறாள் வெண்பா. உடனே சாந்தி, அங்கு விரைந்து வந்து என்ன ஆச்சுமா? என கேட்கிறாள்.


போலீஸ் என்னை கைது செய்வது போல கனவு கண்டேன் என சொல்கிறாள். என்னோட நிம்மதியே போச்சு. முத்து சொன்னதை கேட்டு இருக்க கூடாது. அப்பவே  ஹேமாவை கொலை செய்து இருந்தா எல்லா பிரச்சினையும் முடிவுக்கு வந்து இருக்கும் என கோபமாக கட்டிலை அடிக்க, வெண்பாவின் கையில் காயம் ஏற்படுகிறது. இதை பார்த்த ஷர்மிளா உடனே வெண்பாவை மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார். 


 




வேணு சௌந்தர்யாவிடம் அகிலனை பற்றி விசாரிக்க, அகில் ஹேமாவின் கடத்தல் குறித்து போலீஸிடம் விசாரிக்க சென்றதை பற்றியும் சௌந்தர்யா பாரதியிடம் பேசியது குறித்தும் சொல்கிறார். பாரதியிடம் நடந்ததை பற்றி கூறியதாகவும் அவன் உடனே சென்னைக்கு வருவதாகவும் கூறினார். இந்த தடவை நான் பாரதியை விட போவதில்லை என சௌந்தர்யா கூறுகிறார். சாந்தி ஹேமா இதே மருத்துவமனையின் அட்மிட் செய்பட்டிருக்கும் தகவலை வெண்பாவிடம் சொல்ல வெண்பா சந்தோஷமாகிறாள். சாந்தி இந்த கடத்தல் விவகாரம் குறித்த பயத்தில் உங்களை போலீஸ் கைது செய்தால் என்ன செய்வது என சொல்ல உடனே வெண்பா சாட்சி இல்லாமல் என்னை கைது செய்ய முடியாது என சொல்கிறாள். நான் ஜோசியம் பார்த்ததில் உங்களுக்கு நேரம் சரியில்லை அம்மா என சாந்தி கூற நான் உண்மையை சொல்லாம யாருக்கும் நான் தான் கடத்தினேன் என்பது எப்படி தெரியும். சாட்சி இல்லாமல் கைது செய்ய முடியாது. ஜோசியம் பார்ப்பதை முதலில் நிறுத்து என கூறிவிடுகிறார் வெண்பா. 


 



மறுபக்கம் சௌந்தர்யா கண்ணம்மாவை பற்றியும் லட்சுமி ஏன் சோகமாக இருக்கிறாள் என்பது பற்றியும் விசாரிக்க லட்சுமி எங்களோட அம்மா அப்பா ஏன் 10 வருஷமா பிரிந்து இருக்கிறார்கள்? ஏன் அப்பா என்னையும் ஹேமாவையும் அவரின் குழந்தைகளாக ஏற்று கொள்ளவில்லை? ஏன் அம்மா உண்மையை ஹேமாவிடம் சொல்ல வேண்டாம் என சொல்கிறார் என கேட்க, உடனே அஞ்சலி நீ இன்னும் சின்ன பொண்ணு தான் நீ வளர்ந்த பிறகு, இதை பற்றி தெரிந்து கொள்வாய் என சொல்ல லட்சுமி நான் ஒன்னும் சின்ன குழந்தை இல்லை. எனக்கு எல்லாமே புரியும் எனக்கு அவர்களின் பிரிவு குறித்த காரணத்தை சொல்லுங்கள் என கேட்கிறாள். 


வேணு லட்சுமியிடம் நீ இன்னும் சின்ன பொண்ணு தான் மா. நீ வளர்ந்த பிறகு கண்ணம்மாவே உனக்கு காரணத்தை சொல்வார். அது வரையில் நீ உன்னுடைய அம்மாவை தொல்லை செய்ய கூடாது. ஏற்கனவே அவர் ஏரளமான போராட்டங்களை அனுபவித்து வருகிறார் என சொல்ல உடனே லட்சுமி இனிமேல் அம்மாவை தொல்லை செய்ய மாட்டேன் என சத்தியம் செய்கிறாள்.  இத்துடன் இன்றைய எபிசோட் முடிகிறது.