சிப்பிக்குள் முத்து சீரியலில் ஒன்றாக இணைந்து நடித்ததன் மூலம் நட்பாகி பின்னர் திருமணம் செய்து கொண்டனர் சின்னத்திரை பிரபலங்களான சம்யுக்தா - விஷ்ணுகாந்த். 7 மாதங்களாக காதலித்து வந்த நிலையில் பெற்றோர்களின் சம்மதத்துடன் கடந்த மார்ச் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அவர்களின் திருமண புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டது. ஆனால் அவர்களின் காதல் திருமணம் 15 நாட்களுக்கு மேல் நீடிக்கவில்லை. அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தி வந்தனர். அவர்களின் குற்றச்சாட்டுகள் மற்றும் வீடியோ இணையத்தில் ஒரு பேசுபொருளாக மாறியது. 


 



சம்யுக்தா - விஷ்ணுகாந்த் இருவருமே சோசியல் மீடியாவில் லைவ் மூலம் வந்து ஒருவரை ஒருவர் பற்றி அவதூறாக தகாத வார்த்தைகளால்  குற்றம்சாட்டி வந்தனர். சம்யுக்தா பேசுகையில் 'ஆபாச வீடியோக்களை காண்பித்து அதில் இருப்பது போல தன்னை செய்ய சொல்லி வற்புறுத்தியதாகவும், இல்லை என்றால் அவர்களின் பெட்ரூமில் ஒரு காமெராவை வைத்து அதை பார்க்கலாம் என்றும் விஷ்ணுகாந்த் கூறியதாக தெரிவித்து இருந்தார். மேலும் மாதவிடாய் நேரத்தில் கூட செக்ஸ் டார்ச்சர் செய்ததாக பகிரங்கமாக சோசியல் மீடியாவில் பேசியிருந்தார் சம்யுக்தா. 



இதற்கு பதிலடி கொடுக்கிறேன் என்ற பெயரில் 'சம்யுக்தாவிற்கு எங்களின் திருமணத்திற்கு பிறகு கூட வேறு ஒரு நபரோடு தொடர்பு இருந்தது என்றும் அதை நிரூபிக்கும் வகையில் ஆடியோ ஒன்றையும் வெளியிட்டார். மேலும் அவர் வேறு ஒரு நபருடன் ஆபாசமாக சாட்டிங் செய்துள்ளார் என்று கூறி அதன் ஸ்க்ரீன்ஷாட்டையும் பகிர்ந்து இருந்தார் விஷ்ணுகாந்த்.


 



சம்யுக்தா - விஷ்ணுகாந்த் விவகாரம் இணையத்தில் படு வேகமாக வைரலானது. இவர்களின் விவகாரம் குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ராஜலக்ஷ்மி இவர்களின் இந்த விவகாரம் குறித்து தனது கருத்தினை தெரிவித்துள்ளார். "அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றின அந்தரங்க விஷயங்களை கேவலமாக இப்படி சோசியல் மீடியாவில் பேசுவது சரியல்ல. சோசியல் மீடியாவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்துகிறார்கள். அப்படி அவர்கள் இருவருக்கும் இடையில் பிரச்சனை இருந்தால் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விடலாம். மாறாக அவர்கள் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி கொள்வதன் மூலம் பரிதாபம் தேடி கொள்ள முயற்சிக்கிறார்கள் என்று தெரிவித்து இருந்தார். 


சூப்பர் சிங்கர் ராஜலக்ஷ்மி ஏற்கனவே ஐயா சாமி, சின்ன மச்சான் உள்ளிட்ட ஹிட் பாடல்களை பாடி வெள்ளித்திரையில் ஒரு பாடகியாக  அறிமுகமாகிவிட்டார். அதனை தொடர்ந்து ஒரு நடிகையாகவும் விரைவில் அறிமுகமாக உள்ளார். தனது கணவர் செந்தில் கணேஷுடன் இணைந்து பல வெளிநாட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.