என்னதான் திரைப்படங்கள் மீது மக்களுக்கு மிகுந்த ஆர்வம் இருந்தாலும் சின்னத்திரை நிகழ்ச்சிகள் மீதும் தினசரி ஒளிபரப்பாகும் சீரியல்கள் மீதும் இருக்கும் கிரேஸ் எந்த வகையிலும் குறைய வாய்ப்பே இல்லை. அதற்கு தொலைக்காட்சி சேனல்கள் சான்ஸ் கொடுப்பதும் இல்லை. போட்டி போட்டு கொண்டு ஒவ்வொரு தொலைக்காட்சி சேனல்களும் காலை முதல் இரவு தூக்க போகும் வரை தொடர்ச்சியாக சீரியல்களை வரிசை கட்டி ஒளிபரப்பி வருகிறார்கள். 


மெகா சீரியல் பேன்ஸ்:


ஒவ்வொரு சீரியலுக்கும் ஒரு தனி செட் ரசிகர்கள் நிச்சயமாக இருப்பார்கள். அதிலும் குறிப்பாக ஒரு சில தீவிர சின்னத்திரை ரசிகர்கள் ஒரே நேரத்தில் வெவ்வேறு சேனல்களில் ஒளிபரப்பாகும் இரண்டு மூன்று சீரியல்களை கூட ஒரே நேரத்தில் பார்ப்பதும் உண்டு. இதுபோன்ற டை ஹார்ட் சீரியல் ரசிகர்கள் இருக்கும் வரையில் மெகா சீரியல்களுக்கு எண்டே போட முடியாது. ஒரு சீரியல் முடிந்தவுடன் அடுத்த சீரியல் ரெடியாக காத்துகொண்டு இருக்கும். 


 



புதிய சீரியல்  :






அந்த வகையில் சன் டிவியில் கடந்த அக்டோபர் மாதம் முதல் துவங்கப்பட்ட புதிய சீரியல் தான் 'சிங்கப்பெண்ணே'. திங்கள் முதல் சனி வரை தினந்தோறும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 



கதைக்களம் :


ஒரு கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண் தன்னுடைய குடும்பத்தின் மொத்த சுமையையும் ஏற்கிறாள்.பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்காக கிராமத்தில் இருந்து சிட்டிக்கு தன்னுடைய பயணத்தை தொடர்கிறாள். அங்கே அவள் சந்திக்கும் சங்கடங்கள், தேவைகள்,பிரச்சினைகளை எப்படி துணிச்சலுடன் எதிர்கொள்கிறாள், அந்த சூழ்நிலையை எப்படி சமாளிக்கிறாள் என்பது தான் சிங்கபெண்ணே சீரியலின் கதைக்களம். அதை நோக்கி வெற்றிகரமாக பயணித்து வருகிறது இந்த புதிய சீரியல். 



சிங்கப்பெண்ணே சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் மனீஷா முகேஷ் நடிக்க தர்ஷாக் கௌடா, அமல்ஜித் மற்றும் பலர் நடிக்கிறார்கள். சன் டிவியில் மிகவும் பிரபலமாக பல ஆண்டு காலம் ஒளிபரப்பான 'கண்ணான கண்ணே' சீரியலை இயக்கிய தனுஷ் தான் சிங்கப்பெண்ணே தொடரையும் இயக்குகிறார். 


டி.ஆர்.பி ரேட்டிங் :


அக்டோபர் 9ம் தேதி தொடங்கிய இந்த தொடர் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருவதுடன் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. ஒரே மாதத்தில் டி.ஆர்.பி ரேட்டிங் எகிறும் அளவுக்கு வரவேற்பை பெற்றுள்ளது. முதல் மாதமே  டி.ஆர்.பி ரேட்டிங் வரிசையில் முதலிடத்தில் இடம்பெற்ற தொடர் என்ற பெருமையை பெற்றுள்ளது. சன் டிவியின் பிரபலமான 'கயல்' , 'எதிர்நீச்சல்' தொடர்களும் இதே போல முதல் மாதத்திலேயே டி.ஆர்.பி ரேட்டிங் வரிசையில் முன்னிலை பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. 


தற்போது கயல்,எதிர்நீச்சல் சீரியல்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி 10.28 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது சிங்கப்பெண்ணே சீரியல் என்பது குறிப்பிடத்தக்கது.