சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. 

 

வீட்டை விட்டு கிளம்பத் தயாராக இருக்கும் தம்பிகளைப் பார்த்து இளக்காரமாகப் பேசுகிறார் குணசேகரன். "தம்பிங்க என்னை சரிச்சுப்பிடுவாங்களோ என பயந்து அவங்களை முட்டங்களா நான் வளர்த்தேன்" என சொல்லவும் அதைக் கேட்டு மூன்று தம்பிகளும் அதிர்ச்சி அடைகிறார்கள். 

 

 


 

"ஒருத்தன் தோற்றுப் போனா தானே இன்னொருத்தன் ஜெயிக்க முடியும்?" என குதர்க்கமாக கேள்வி கேட்க, "எங்க வெற்றி என்பது உங்களிடம் எங்களை நிரூபிப்பது இல்லை" என ஜனனி பதிலடி கொடுக்கிறாள். "ஒரு வேளை நாளைக்கு நீங்க தோற்றுப்போனா?" என அப்பவும் விடாமல் நொண்டி நொண்டி குணசேகரன் கேட்க "நாங்க தோற்றுப் போக மாட்டோம்" என சவால் விடுகிறாள் நந்தினி.

தர்ஷினியை அவளுடைய கோச்சிடம் அழைத்துச் செல்கிறார் ஜீவானந்தம். "தர்ஷினி ஜெயிக்கும்னா உங்க ஒத்துழைப்பு இல்லாமல் நடக்காது" என ஜீவானந்தம் சொல்ல, "தர்ஷினி பெயரை லிஸ்டில் சேர்ப்பதிலேயே ஏகப்பட்ட எதிர்ப்பு இருக்கிறது" என கோச் சொல்ல அதைக் கேட்டு ஜீவானந்தமும் தர்ஷினியும் அதிர்ச்சி அடைகிறார்கள். இது தான் இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ஹிண்ட். 

 


 

கடந்த வாரத்தில் தர்ஷினியை எப்படியாவது உமையாள் மகன் சித்தார்த்துக்கு திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என தீவிரமாக அனைத்து தில்லாலங்கடி வேலைகளையும் செய்து வந்தார் குணசேகரன். நான்கு பெண்களுக்கும் எவ்வளவு முயற்சி செய்தும் அவர் செய்தும் அநியாயத்தை நிறுத்த முடியாமல் அவதிப்பட்டனர். வாக்குவாதம் முற்றி அடிதடியில் இறங்கினார்கள். அஞ்சனா அந்த நேரத்தில் மணக்கோலத்தில் திருமண மண்டபத்துக்கு வர சித்தார்த் ஒரு வழியாக அஞ்சனா கழுத்தில் தாலியைக் கட்டி கலவரத்தை ஒரு முடிவுக்கு கொண்டு வந்தான்.   

 

அவமானப்பட்டு தலை குனிந்து நின்ற குணசேகரனிடம் சென்று ஈஸ்வரி அவள் இழந்த வாழ்க்கைப் பற்றி வேதனையுடன் பேசுகிறாள். இனி இந்த வாழ்க்கை தேவையில்லை. என்னால் சாதித்து காட்ட முடியும் என சவால் விடுகிறாள். 

 


குணசேகரன் தம்பிகள் மற்றும் மருமகள்கள் அனைவரும் வீட்டை விட்டு கிளப்புவது என முடிவெடுத்து விட்டார்கள். அவர்களை மீண்டும் சீண்டி பார்க்கிறார் குணசேகரன். இந்த புது முயற்சியில் பெண்கள் சந்தித்து காட்டுவார்களா? தனியாக நிற்கப் போகும் குணசேகரன் ஆட்டம் எப்படி இருக்க போகிறது? தர்ஷினி போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெருவாளா? இப்படி பல கேள்விகளுக்கும் வரும் வாரங்களில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் எபிசோடில் விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.