சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய எபிசோடில் நந்தினி மிகவும் வருத்தப்பட்டு பேசுகிறாள். "வெளியே தைரியமாக பேசினாலும் உள்ளுக்குள்ள நாம அத்தனை பேருக்கும் அவ்வளவு பயம் இருக்கு. இது தான் விதி" என சொல்கிறாள். பிள்ளைகள் அனைவரும் அவர்களின் அம்மாவை நீங்கள் வெளிய போய் உங்களுக்கு பிடித்த மாதிரி இருங்கள் என  சொல்கிறார்கள். "வெளியே போவதால் மட்டும் இவர்கள் மாறி விடமாட்டார்கள். பெரியதாக அவர்கள் அடிபட்டால் மட்டுமே திருந்துவார்கள்" என்கிறாள் ஈஸ்வரி. "அப்படியே அமைதியாக இருக்க முடியாது இப்படியே அவரை வெளியே வரவைக்க வேண்டும். எதிர்த்து கேள்வி கேட்க வேண்டும்" என ஜனனி சொல்கிறாள். 


 




அடுத்த நாள் காலை ஞானம் கதிரிடம் ஒரு வேலையை பார்க்க சொல்கிறான். ஆனால் கதிர் ஞானத்திடம் சண்டையிட்டு உன்னால் முடிந்தால் பாரு இல்லாட்டி வாயை மூடு என்கிறான். கதிர் காபிக்காக நந்தினியை கூப்பிடுகிறான் ஆனால் அவள் வராததால் கரிகாலன் சென்று சமையல் அறையில் பார்க்கிறான். அங்கு யாருமே இல்லை. காலையில் இருந்து வீட்டில் எந்த பொம்பளை ஆட்களையும் காணவில்லை பிள்ளைகளையும் காணவில்லை என வீடு முழுக்க தேடுகிறர்கள். ஆனால் அவர்கள் யாருமே கண்ணில் தென்படவில்லை. 


மாடிக்கு சென்று பார்த்தால் அனைவரும் பால்கனியில் உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்கள். ஞானமும் கதிரும் கத்தினாலும் அவர்கள் எதையும் சட்டை செய்யாமல் அமைதியாகவே இருக்கிறார்கள். "என்ன ஸ்ட்ரைக் பண்றீங்களா? நீங்க என்ன செய்தாலும் எதுவும் நடக்காது" என்கிறான் ஞானம். விசாலாட்சி அம்மாவும் வந்து சொல்லியும் யாரும் கேட்கவில்லை. ஜனனி தான் காரணம் என அவளை திட்டுகிறார். 


 



தர்ஷினி, ஐஸ்வர்யா, தர்ஷன், தாரா என அனைவரும் விசாலாட்சி அம்மாவிடம் நியாயம் கேட்கிறார்கள். "எங்க அம்மாவை தப்பாக பேசுவதற்கு எங்க அப்பாவுக்கே உரிமை இல்ல. அதிலும் மத்தவங்க  எல்லாம் பேசுறது ரொம்ப தப்பு. கதிர் சித்தப்பா பேசுறது ரொம்ப தப்பு" என்கிறான் தர்ஷன். "உங்க அம்மா பண்றது எல்லாம் நல்ல விஷயம் பாரு. அவளை பேச கூடாது" என தப்பாக பேசுகிறான் கதிர். 


"எங்களால் தான் உங்க அண்ணன் போனாரு. அது தான் கண்டு பிடுச்சுடீங்களே கூட்டிட்டு வர வேண்டியது தானே. ஏதோ செருப்பை கொண்டு வந்து காட்டிட்டு எங்களை எல்லாரையும் டார்ச்சர் செய்றீங்க" என்கிறாள் ஈஸ்வரி. "தர்ஷன், தர்ஷினியும் எங்க அப்பா எங்கன்னு எனக்கு தெரியணும்" என்கிறார்கள். கதிர் அநாகரீகமாக ஈஸ்வரியை பேச அவள் அவனை பளார் என கன்னத்தில் அறைந்து விடுகிறாள். அத்துடன் நேற்றைய  எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோட் முடிவுக்கு வந்தது.