சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய எபிசோடில் குணசேகரன் வீட்டுப் பிள்ளைகள் அம்மாக்களுக்கு அட்வைஸ் செய்கிறார்கள். “உங்களின் அருமை தெரியாத இந்த வீட்டில் நீங்கள் இருப்பதை விட நீங்கள் அனைவரும் வேறு எங்காவது சென்று உங்களுக்கு பிடித்த மாதிரி வாழுங்கள்.


எங்களுக்காக என பார்த்து உங்களின் வாழ்க்கையை தொலைக்காதீர்கள். எங்களை நாங்கள் பார்த்து கொள்கிறோம். நீங்கள் இல்லமல் இந்த வீடு எப்படி இருக்கும் என்பது அவர்களுக்கு புரிய வேண்டும்” என ஊக்கப்படுத்துகிறார்கள். 


அடுத்த நாள் காலை ஈஸ்வரியை தேடிக் கொண்டு காலேஜில் இருந்து ஒரு ஆசிரியை வந்து “ஈஸ்வரிக்கு அடுத்த வாரம் லெக்ச்சர் இருக்கு, அதை சொல்லிவிட்டு போக வந்தேன்” என சொல்ல பிரச்சினை படு பயங்கரமாக வெடிக்கிறது. 


விசாலாட்சி அம்மா மொத்தமாக மகன்கள் பக்கமாக சாய்ந்து அப்படியே பழைய விசாலாட்சியாக மாறிவிடுகிறார். அதை சற்றும் எதிர்பார்க்காத மருமகள்களுக்கு அவரின் இந்த மாற்றம் அதிர்ச்சியாக இருக்கிறது. வந்த ஆசிரியையை விரட்டாத  குறையாக "இந்த வீட்டு பொம்பளைங்க எவளும் வீட்டு வாசலை தாண்ட மாட்டாளுங்க, தாண்டவும் முடியாது" என சொல்லி அனுப்பி விடுகிறார்கள். ஈஸ்வரி "அதை நான் முடிவு செய்கிறேன்" என சொன்னாலும் அவளை பேச விடாமல் அடக்கி விடுகிறார்கள். 


தர்ஷினி போட்டு இருக்கும் ட்ரெஸ்ஸை பார்த்து அவளையும் திட்டி பாவாடை தாவணி போட சொல்லி திட்டி அனுப்பி விடுகிறார்கள். வெண்பாவைப் பார்த்த கதிர் இன்னும் அவள் போகாமல் வீட்டிலேயே இருப்பதை பார்த்து முறைக்கிறான். அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது. 


அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. 


ஈஸ்வரிக்கு போன் வருகிறது. அவளுக்கு ஜீவானந்தம் போன் செய்கிறார். "குணசேகரன் இருக்கும் இடம் தெரிஞ்சுடுச்சு" என்கிறார் ஜீவானந்தம். அதே நேரத்தில் கதிருக்கும் ஃபோன் வருகிறது. போன் செய்து இருப்பது குணசேகரன். போனை வாங்கிய கதிர் "சொல்லுங்க அண்ணே" என்கிறான்.  "என்ன நடந்தாலும் இந்த தடவ மிஸ்ஸே ஆகக்கூடாது கதிரு" என்கிறார் குணசேகரன். "இந்த தடவ பிசிறு தட்டாது. நான் பார்த்துக்குறேன்" என்கிறான் கதிர்.


கதிர் பேசியதை கேட்டு ஷாக்கான ஜனனி "இந்த தடவ அவரா நாமளா என பாத்துடலாம்" என்கிறாள். குணசேகரன் என்ன சொன்னார் என்பதை பற்றி தெரிந்துகொள்ள அனைவரும் ஆவலாக இருந்தாலும் அவர் பேசியதை நினைத்து அம்மா, தம்பி, தங்கை மூவரும் சந்தோஷப்படுகிறார்கள். இது தான் இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ஹிண்ட். 


 



ஜனனி எடுக்க போகும் ஸ்டேப் என்ன? துணிச்சலாக இருந்த பெண்களின் தன்னம்பிக்கையை உடைத்து விட்டதால் துவண்டு இருக்கும் குணசேகரன் வீட்டுப் பெண்கள் மீண்டும் எழுவார்களா? குணசேகரன் திட்டம் நிறைவேறுமா? இந்த முறை ஜெயிக்க போவது குணசேகரனா? ஜனனியா? மறைந்து இருக்கும் குணசேகரன் கதாபாத்திரம் விரைவில் வெளியில் வருமா? இப்படி பல கேள்விகளுக்கு வரும் எபிசோடுகளில் பதில் கிடைக்கும்  என மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள் ரசிகர்கள்.