ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் வீட்டுக்கு வந்த ராமிடம் அவனுக்குத் தெரியாமல் 20% ஷேரை எழுதி வாங்க அர்ச்சனா பிளான் போட்ட நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
அதாவது சீதா சாமி கும்பிட விளக்கு அணைத்துப் போக, அதிர்ச்சி அடையும் அவள் துரைக்கு போன் செய்து விஷயத்தை சொல்ல, “ராமை எதுக்கு இங்க அனுப்பின?” என்று திட்டுகிறார். இங்கே சுபாஷ் டாகுமெண்ட்டை தயார் செய்ய சொல்லி பேசி விட்டு ராம் இருக்கும் இடத்திற்கு வந்து அமர்கிறார்.
கொஞ்ச நேரத்தில் மகாவும் சேதுவும் வீட்டிற்கு வர, ராம் அவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கி விட்டு பிசினஸ் விஷயத்தை சொல்ல, மகா அதிர்ச்சி அடைகிறாள். சேது எவ்வளவு பணம் வேண்டும் எனக் கேட்க, ராம் நான் ஆசீர்வாதம் தான் வாங்க வந்தேன் என்று சொல்கிறான்.
“மகா குரூப் ஆப் கம்பெனிஸூக்கு எதிராக ராம் குரூப் ஆப் கம்பெனியா?” என்று தங்கைகள் கேட்க, அது இல்ல சீதா குரூப் ஆப் கம்பெனி என அதிர்ச்சி கொடுக்கிறார். அடுத்து ராம் கிளம்பும்போது சுபாஷ் அவனைத் தடுத்து நிறுத்தி “டெண்டர் விஷயமா டாக்குமென்டில் கையெழுத்து போடணும்” என்று சொல்லி டாகுமெண்டடை கொடுக்க, ராமும் படிக்காமல் கையெழுத்து போட கடைசி நிமிடத்தில் துரை வந்து தடுத்து நிறுத்தி அதை வாங்கி படிக்க உண்மை வெளியே தெரிய வருகிறது.
துரை கோபப்பட, “ராம் என்கிட்டே சொல்லி கேட்டு இருந்தாலே கையெழுத்து போட்டு இருப்பேனே” என்று சொல்ல, சீதா “நீங்க கையெழுத்து போட்டுட்டு வாங்க பாஸ்” என்று சொல்ல, “துரை இது உங்க அம்மா ஆரம்பித்த கம்பெனி அப்படி யாருக்கும் எழுதி கொடுக்காத” என பாத்திரத்தை கிழித்துப் போடுகிறான்.
மகா மற்றும் சேது அர்ச்சனா மீதும் சுபாஷ் மீதும் கோபப்பட, இருவரும் "மீரா மாதிரி 20% ஷேர் வச்சிட்டு உங்கள அசிங்கப்படுத்த கூடாதுனு தான் இப்படி பண்ணோம்" என்று டிராமா போடுகின்றனர்.
அர்ச்சனா "நாங்க வீட்டை விட்டு போறோம்" என்று சொல்ல, மகா "இதுக்கு மேலயும் இப்படி நடக்காமல் பாத்துக்கோங்க" என வார்னிங் கொடுத்து அவர்களை வீட்டில் தங்க சொல்கிறாள். இப்படியான நிலையில் இன்றைய சீதா ராமன் எபிசோட் நிறைவடைகிறது.