சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய எபிசோடில் ரேணுகா மற்றும் நந்தினியின் அப்பாவை மரியாதை இல்லாமல் அவமானப்படுத்துகிறார் விசாலாட்சி அம்மா. "உங்க மக பொங்கி போடுறாளாம். அது தெரிந்தும் அவளை கண்டிக்காமல் வாழ்த்தி அனுப்புறீங்களா? பெரியவன் வர போறான் அதுக்குள்ள சுருட்ட முடிஞ்சதை எல்லை சுருட்டிக்கிட்டு ஓடிடலாம் கொள்ள பக்கம் வாங்கனு சொன்னாளுங்களா? என்னோட குடியைக் கெடுக்க வந்தவளுங்க" என்கிறார் விசாலாட்சி அம்மா. அவரை எதிர்த்து பேசுகிறாள் நந்தினி. 


 



கதிரையும் ஞானத்தையும் போலீஸ் அடித்து இழுத்து செல்கிறார்கள். “குணசேகரான எங்கே” எனக் கேட்க அவர்கள் எதுவும் சொல்லாததால் அடிக்கிறார்கள். அப்போது புதிய குணசேகரன் கம்பீரமாக காரில் வந்து இறங்கி என்ட்ரி கொடுக்கிறார். கதிரையம் ஞானத்தையும் அடிப்பதை பார்த்து எகிறி கொண்டு வருகிறார் குணசேகரன். அண்ணனை பார்த்த சந்தோஷத்தில் ஓடிவந்து அணைத்து கொள்கிறார்கள் தம்பிகள். 


எதற்காக உங்களை அடிக்கிறார்கள் என குணசேகரன் கேட்க "நாங்க உங்களை கொலை செய்துவிட்டோம் என பரதேசி சக்தியும் ஜனனியின் போலீசில் கம்பிளைண்ட் கொடுத்து இருக்காங்க" என்கிறான் கதிர். போலீசை எகிறிக்கிட்டு போய் அடிக்கிறார் குணசேகரன். "உங்க தம்பி சக்தி தான் கம்பிளைண்ட் கொடுத்தாங்க. அதனால் விசாரிச்சா வாயை திறக்கவே இல்லை. அதனால் தான் அடிச்சு கேட்டோம்" என இன்ஸ்பெக்டர் சொல்கிறார். "அதனால கையை வைப்பியா. யாருனு தெரிஞ்சு கையை வச்சுட்ட. உனக்கு இந்த குணசேகரன் கோட்டுல நிச்சயமா தண்டனை உண்டு" என சொல்லி  மிரட்டுகிறார். பிறகு அங்கிருந்து கிளப்புகிறார்கள். 


வீட்டில் விசாலாட்சி அம்மா சம்பந்திகளிடம் "நீங்க உங்க மகள்களை  கூட்டிட்டு போய்கிட்டே இருங்க, இவளுங்க அப்பன் வீட்டில போய் உட்கார்ந்துகிட்டு என்ன ஆட்டம் போடுறாளுங்களோ போடட்டும்" என்கிறார் விசாலாட்சி அம்மா. 


 



"அதெல்லாம் அப்படியே போக முடியாது. கணக்கை எல்லாம் தீர்த்துட்டு எனக்கு சேர வேண்டியது எல்லாத்தையும் வாங்கிகிட்டு தான் இங்க இருந்து போவேன். நான் தாலி கட்டி வந்த நாளில் இருந்து இந்த வீட்ல புல்லு புடுங்குற வேலையில் இருந்து, சாக்கடை அடைப்பு எடுக்குற வரைக்கும் எல்லா வேலையும் பார்த்து இருக்கேன். இதுக்கெல்லாம் யாரு பதில் சொல்லுவா" என கொந்தளிக்கிறாள் நந்தினி. "இந்த வீட்டில் வேலை செய்து செய்து நாங்கள் உடல் அளவிலும் மன அளவிலும் எவ்வளவு கஷ்டப்படுறோம்னு எங்களுக்கு தான் தெரியும். உங்க புள்ள வரட்டும். இதுக்கு ஒரு முடிவு கட்டிட்டு தான் மறுவேலை" என்கிறாள் நந்தினி.


கதிர், ஞானம் மற்றும் குணசேகரன் மூவரும் காரில் வந்து கொண்டு இருக்கிறார்கள். அத்துடன் நேற்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது. 


அதன் தொடர்ச்சியாக இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது..


கோயில் வாசலில் கதிர், ஞானம் மற்றும் குணசேகரன் உட்கார்ந்து இருக்க அங்கே வருகிறார்கள் ஜனனி மற்றும் சக்தி. குணசேகரனை நேரடியாக எதிர்க்கும் ஜனனி குணசேகரனை பார்த்து "அடுத்தவங்களை பத்தி நீங்க கவலை படறதே இல்லை இல்ல. எல்லாமே உங்களுக்கு நடக்கணும். நீங்க என்னிக்கு தான் மாற போறீங்களோ?" என மனதில் பட்டதை பேசுகிறாள். அவளை கதிரும் குணசேகரனும் முறைக்கிறார்கள். 


 



விசாலாட்சி அம்மா வீட்டில் உள்ள மருமகள்களை அவமானப்படுத்துவது போல பேசிவிட்டு இப்போது குணசேகரன் வீட்டுக்கு வருகிறார் என்றதும் சமயலறைக்கு சென்று "மூத்தவன் வந்துருவான். அதுக்குள்ள அலங்காரம் பண்ணிக்கிட்டு கீழ வாங்க" என கூச்சமே இல்லாமல் பேச, அவர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியாக இருக்கிறது. சரியான பதிலடியாக "எங்களை என்ன பொண்ணு பார்க்கவா வராக" என நக்கலடிக்க விசாலாட்சி அம்மா அவளை பார்த்து முறைக்கிறார். 


 



 


கோயிலில் இருந்து கிளம்பி வீட்டுக்கு கதிர், ஞானம் மற்றும் குணசேகரன் காரில் வந்து இருக்க ஜனனியும் சக்தியும் பைக்கில் வீட்டுக்கு வேகமாக விரைகிறார்கள். அப்போது கதிர் குணசேகரனினிடம் இங்க என்ன நடந்ததுன்னு தெரியுமா? என சொல்லி ஈஸ்வரி வேலைக்கு போவதை பற்றியும், வெண்பாவை வீட்டுக்கு அழைத்து வந்தது பத்ரியும் சொல்லி வத்தி வைக்கிறான். அதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார் குணசேகரன். இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ஹிண்ட். 


 



வீட்டுக்கு வருவதற்கு முன்னரே அவரை நன்றாக ஏத்திவிட்டதால் வீட்டில் என்ன நடக்கப்போகிறது என்பதை தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள் ரசிகர்கள். கண்டிப்பாக பெரிய கலவரம் வெடிக்கப் போகுது, அது மட்டும் உறுதி!


வேல ராமமூர்த்தியை, குணசேகரனாக ரசிகர்கள் ஏற்று கொள்ள கொள்ள கொஞ்ச காலஅவகாசம் தேவைப்படும். ஏனெனில் அவர்கள் மனதில் தனது தனித்தன்மையான மேனரிஸத்தை பதிய வைத்து விட்டார் நடிகர் மாரிமுத்து என்பது மறுக்கமுடியாத உண்மை!