சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் போன வார எபிசோடுகளில் அனைவரும் கிளம்பி திருவிழாவுக்கும் அப்பத்தா நடத்த போகும் பங்ஷனில் கலந்து கொள்வதற்காகவும் ஊருக்கு செல்கிறார்கள். கதிர், கரிகாலன் மற்றும் வளவன் தனியாக இரண்டு நாட்கள் முன்னரே கிளம்பினர். ஆனால் வரும் வழியில் கதிருக்கு ஒரு பெண்ணிடம் இருந்து போன் வரவே அவன் புத்தி மாறி வளவனையும் கரிகாலனையும் கழட்டி விட்டு அந்த பெண் இருக்கும் ஊருக்கு அவளை தேடி சென்றுவிட்டான். சென்ற இடத்தில் வசமாக கௌதமிடம் சிக்கி கொண்டான். ஊரில் திருவிழா ஏற்பாடுகள் பலமாக நடைபெற குணசேகரனும் ஊரில் வந்து இறங்கி விட்டார். இந்த வாரம் முழுவதும் ஒரே பரபரப்பாக இருக்க போகிறது. அந்த வகையில் இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
ஈஸ்வரியின் அப்பா அப்பத்தாவிடம் வந்து "இந்த வீட்டு பொம்பளைங்க ஆச்சரியப்படுற மாதிரி ஒரு விஷயம் இருக்குன்னு சொன்னாங்க. அது என்னன்னு தான் எனக்கு புரியவே இல்லை" என அவர் சொல்ல அப்பத்தா சிரித்து கொள்கிறார். ஆனால் நந்தினி, ஈஸ்வரி என அனைவருக்கும் சந்தேகமாக இருக்கிறது. இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ஹிண்ட்.