சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய (அக்.26) எபிசோடில் தர்ஷினியை காபி போட்டுக் கொடுக்க சொன்னதோடு நிறுத்திவிடாமல் அடுத்தாக சமைக்கவும் சொல்லவும் அவளது முகமே மாறிவிடுகிறது. "இந்த ஆம்பள பிள்ளைங்க விளையாடுற விளையாட்டு எல்லாம் வேண்டாம் படிச்சு முடி நல்ல ஒரு மாப்பிள்ளையா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்குறேன். வம்சத்தை விருத்தி செய்" என குணசேகரன் சொன்னதும் தர்ஷினியின் முகத்தில் கோபம் கொப்பளிக்கிறது.
வீட்டுக்கு வந்த சம்பந்திகளை அவமானப்படுத்தி அனுப்பி வைக்கிறார் குணசேகரன். அந்த சமயத்தில் குணசேகரனை சந்திக்க வருகிறார்கள் ஆடிட்டர் மற்றும் வக்கீல்.
ஜான்சிராணி செய்யும் அடாவடித்தனத்திற்கு ஒரு அளவே இல்லாமல் அனைவரையும் பாடாய்படுத்துகிறாள். வயிறு கலக்குகிறது என சொல்லி வண்டியை ஓரம்கட்ட சொல்லி டார்ச்சர் செய்கிறாள். மறுபக்கம் கதிர் போன் பேசிய அந்தப் பெண்ணை சந்திக்கச் செல்வதால் வளவனையும் கரிகாலனையும் கழட்டிவிட்டு, நைசாக எஸ்கேப்பாகி விடுகிறான். ஈஸ்வரியோ ஜீவானந்தம் பேசியதைப் பற்றியும் குணசேகரனை நிச்சயம் பழிவாங்கி விடுவேன் என சொன்னதையும் நினைத்து நினைத்து கவலைப்படுகிறாள். இப்படி ஒரு இழுபறியாக நேற்றைய எதிர்நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது.
அதன் தொடர்ச்சியாக இன்றயை (அக்டோபர் 27) எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
அப்பத்தா விழா நடத்தப்போகும் இடத்திற்கு அனைவரும் வந்து இறங்குகிறார்கள். மிகுந்த மனநிறைவுடன் வந்து இறங்கும் அவர்களை அப்பத்தா சந்தோஷமாக வரவேற்கிறார். "மனசுல எந்த கஷ்டம் இருந்தாலும் இந்த வீட்டுக்குள்ள வரப்போ மனசே லேசான மாதிரி இருக்கு அப்பத்தா" என ஜனனி சொல்ல அனைவரும் அதை ஆமோதிக்கிறார்கள்.
ஜான்சி ராணி தனது வேலையே அப்பத்தாவிடம் காட்டத் தொடங்கிகிறாள். "கொஞ்சம் பாத்து ஆடுங்க..." என ஜான்சி ராணி சொல்ல "நீ ஒரு கேஸ்ல மாட்டுன இல்ல. இன்ஸ்பெக்டருக்கு ஒரே ஒரு போன் பண்ணேனா வந்து அப்படியே அள்ளிக்கிட்டு போயிடுவாரு" என அப்பத்தா ஜான்சிராணியை மடக்க, அவளது முகம் போன போக்கை பார்த்து அனைவரும் ரசிக்கிறார்கள். அப்பத்தாவால் மட்டுமே ஜான்சி ராணியை அடக்கி வைக்க முடியம்.
வீட்டில் குணசேகரன் செய்யும் வேலைகளைப் பற்றி ஈஸ்வரியிடம் போன் மூலம் சொல்கிறான் தர்ஷன். அதைக் கேட்டு அதிர்ச்சி அடைகிறாள் ஈஸ்வரி. "அவன் ஆட்டத்தை ஆரம்பிக்கிறான். நீயா நானா என பார்த்து விடலாம் என்ற முடிவோடு வருவான் பாரு” என அப்பத்தா குணசேகரனின் பிளான் பற்றி சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறார். அதைக் கேட்ட அனைவரும் ஷாக்காகிறார்கள். இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ஹிண்ட்.