சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய எபிசோடில் விசாலாட்சி அம்மா குணசேகரன் வருகைக்காக வாசலிலேயே பேரப்பிள்ளைகளுடன் காத்திருக்கிறார். அந்த நேரத்தில் சம்பந்திகள் இருவரும் வீட்டுக்கு வருகிறார்கள். அவர்களை "எதற்காக வந்தீர்கள்?" என அநாகரீகமாக விசாலாட்சி அம்மா கேட்க "அப்பத்தா தான் அவர் நடத்தும் பங்க்ஷனுக்கு எங்களை அழைத்தார்கள். அதுதான் உங்களிடம் சொல்லி விட்டு செல்லலாம் என வந்தோம்" என சொல்கிறார்கள் சம்பந்திகள்.

குணசேகரன் காரில் வந்து இறங்க விசாலாட்சி அம்மா பாசத்துடன் நலம் விசாரிக்கிறார். வழக்கத்திற்கு மாறாக குணசேகரன் பிள்ளைகளுக்கு சாக்லேட் வாங்கி வந்து பாசத்துடன் கொடுக்கிறார். பிள்ளைகளும் வேண்டா வெறுப்பாக வாங்கி கொள்கிறார்கள்.




கதிர் டிரைவரிடம் சொல்லி ஏதாவது ஒரு டீ கடையில் நிறுத்த சொல்கிறான். கரிகாலன் அங்கும் சென்று அவனுடைய லந்தை காட்ட வளவன் கடுப்பாகிறார். அந்த நேரம் பார்த்து கதிருக்கு ஒரு பொண்ணு போன் செய்கிறாள். ஒரு பெண்ணுடைய குரல் கேட்டதும் கதிர் ஜொள்ளு விட்டுக்கொண்டு தனியாக சென்று பேசுகிறான். ஏதோ உறவுக்கார பெண் என சொல்லி அந்த பொண்ணும் ஆதிரை கல்யாணத்தில் கதிரை பார்த்து ரசித்ததை பற்றி பேசி கதிரை மயக்குகிறாள்.


கரிகாலன் வந்து அழைத்தாலும் அவனை திட்டி அனுப்பி விடுகிறான் கதிர். வளவனுக்கும் கதிர் செய்வதை பார்த்து கோபமாக வருகிறது.



"ஊரில் ஒரு திருவிழா அதற்காக தான் நான் செல்கிறேன்" என கதிர் சொல்ல "எங்க ஊருக்கு பக்கத்திலேயே தான் நீங்க இருக்கீங்க" என சொல்லி கதிரை  பேசியே மயக்கிய அந்த பெண் போனை கட் செய்து விடுகிறாள். உடனே கதிர் அவளை திருப்பி அழைத்து "நான் உன்னை கண்டிப்பாக நேரில் சந்திக்க வருகிறேன். உன்னுடைய லொகேஷனை அனுப்பு" என்கிறான் கதிர்.

வீட்டில் குணசேகரனுக்கு விசாலாட்சி அம்மா "காபி போட்டு தரவா?" என கேட்க "நீ ஏன் அம்மா போடணும் இந்த தர்ஷினி இருக்கா இல்ல. அவ போட்டு எடுத்துட்டு வருவா" என சொல்ல தர்ஷினி அதிர்ச்சி அடைகிறாள். "எனக்கு காபி போட தெரியாது" என தர்ஷினி சொல்ல "பொம்பள பிள்ளையை எப்படி வளர்த்து வச்சு இருக்காளுங்க" என குணசேகரன் திட்ட "சவால்களுக்கு வீடு மீது அக்கறை எல்லாம் இல்லை. ஒழுங்கா தான் இருந்தாளுங்க. இந்த மெட்ராஸ்காரி வந்த உடனே தான் ஆளே மாறிட்டாளுங்க" என்கிறார் விசாலாட்சி அம்மா.

தர்ஷனை அழைக்கிறார் குணசேகரன். "என்னிக்கு நீ என்னோட பேச்சையும் சித்தப்பா பேச்சையும் கேட்டுட்டு இருந்தியோ அன்னைக்கு வரைக்கும் நீ நல்லா தான் இருந்த. என்னிக்கு உன்னோட ஆத்தா பேச்சையும் சித்திங்க பேச்சையும் கேட்க ஆரம்பிச்சியோ அன்னைக்கே நீ மிரண்டு போயிட்ட. மீசை வைச்சா எல்லாம் ஆம்பளை ஆகிவிட முடியாது" என்றதும் தர்ஷன் அவரை பார்த்து முறைக்க "என்னப்பா நான் பேசிக்கிட்டே இருக்கேன் இவன் என்னவோ முழிக்கிறான்" என ஞானத்திடம் குணசேகரன் சொல்ல "அவன் முழிக்கல அண்ணன் முறைக்கிறான்" என்கிறான் ஞானம். "முறைக்கிறானா எல்லாத்தையும் சரி பண்ணிடலாம்" என்கிறார் குணசேகரன்.  

தர்ஷினி காபியை எடுத்து வந்து கொடுக்க அதை குடித்து பார்த்து "நல்லா தான் இருக்கு. இது தான் பொம்பளை பிள்ளைக்கு அழகு" என சொன்னதும் தர்ஷினி அவரை பார்த்து முறைத்து பார்க்கிறாள். அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோட் முடிவுக்கு வந்தது.