ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.
இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் தீபாவிடம் சவால் விட்டு கார்த்திகை கோயிலுக்கு கூப்பிட்ட நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். அதாவது கோயிலுக்கு வந்த மலர் போட்டோ எடுத்து தீபாவை வெறுப்பேற்ற அவளுக்கு அனுப்பி வைக்க அதைப் பார்த்து தீபா உடனடியாக போன் செய்ய மலர் கடுப்பாகித்தான் போன் செய்கிறாள் என நினைத்து போனை அட்டென்ட் பண்ண, “உனக்கு நான் ஒரு வீடியோ அனுப்பி இருக்கேன், அதைப் பாரு” என்று கூறுகிறாள்.
உடனே மலரும் அதைப் பார்க்க, கார்த்திக் மற்றும் தீபா இருவரும் பைக்கில் வந்து கொண்டிருப்பது பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். பிறகு கார்த்திக் மலரிடம் “இப்ப எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு, சில விஷயங்களை மாற்றிக் கொண்டுதான் ஆக வேண்டும்” என்று சொல்ல, அதைக் கேட்டு மலர் கடுப்பாகி சென்றது தெரிய வருகிறது.
பிறகு கார்த்திக் மற்றும் தீபா இருவரும் கோயிலுக்கு வந்திருக்க, “பூசாரி யார் பெயருக்கு அர்ச்சனை?” என்று கேட்க, தீபா புருஷன் பெயரில் சொல்லத் தயங்கி “முருகனோட இன்னொரு பெயர் தான்” என்று சொல்லி ஐயரை கண்டுபிடிக்க வைத்து அர்ச்சனை செய்கிறாள்.
அடுத்து கோயிலில் தரிசனத்தை முடித்து வெளியே வர ஒரு மரத்தின் அடியில் எல்லோரும் நின்று வேண்டிக் கொண்டிருக்க, என்ன விஷயம் என்று கேட்க, “இந்த மரத்தின் அருகே நின்று நாம் ஏதாவது வேண்டினால் மரத்திலிருந்து ஒரு பூ நம் கையில் விழுந்தால் அது நிச்சயம் நடக்கும் என்பதை ஐதீகம்” என்று சொல்கின்றனர்.
உடனே தீபா அந்த மரத்தின் அருகே சென்று, “நானும் கார்த்திக் சாரும் நல்லபடியாக வாழ வேண்டும் அபிராமி அந்த என்னை புரிந்து கொள்ள வேண்டும்” என வேண்டுகிறாள். தீபா வேண்டுதலோடு இன்றைய கார்த்திகை தீபம் எபிசோட் நிறைவடைகிறது.