சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய (அக்டோபர் 16) எபிசோடில் ஜீவானந்தம் வீட்டுக்கு ஈஸ்வரி செல்ல வெண்பா இன்று தன்னுடைய அம்மாவின் பிறந்தநாள் என சொல்கிறாள். ஜீவானந்தத்தோடு சில விஷயங்கள் பேச வேண்டும் என சொன்னதால் வெண்பாவை உள்ளே செல்ல சொல்கிறார் ஜீவானந்தம்.
பிறகு ஈஸ்வரி மெல்ல மெல்ல ஜீவானந்தத்தை அப்பத்தா நடத்தும் பங்ஷனுக்கு வர வேண்டாம், வந்தால் ஏதாவது பிரச்சினை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என மழுப்பலாக சொல்கிறாள் ஈஸ்வரி. "அப்பத்தா சொன்ன காரணம் சரியாக பட்டதால் தான் நான் வர சம்மதித்தேன். அதில் உங்களுக்கு ஏதாவது சிக்கல் இருக்கு என்றால் சொல்லுங்கள் நான் வரவில்லை" என்கிறார் ஜீவானந்தம்.
மேலும் அவர் பேசுகையில் "40% ஷேர் நான் வைத்து இருந்ததால் தான் இந்த பிரச்சினை. அதை தான் நான் உங்கள் அப்பத்தா பெயரில் மாற்றி கொடுத்து விட்டேனே. அதனால் உங்கள் கணவருக்கு என் மீது இருந்த விரோதம் சற்று தணிந்து இருக்கும் என நினைக்கிறன்" என்கிறார் ஜீவானந்தம்.
ஈஸ்வரி சற்று தயங்கி தயங்கியே பேசுகிறாள். "உங்கள் மனைவியின் மரணத்திற்கு காரணம் என்னுடைய கணவர் குணசேகரனும் கொழுந்தன் கதிரும் தான்" என உண்மையை ஈஸ்வரி சொல்ல ஜீவானந்தம் முகத்தில் கோபம் கொந்தளிக்கிறது.
பேக்டரி ஓனரை பார்ப்பதற்காக ஜனனியும் சக்தியும் செல்கிறார்கள். அங்கே அந்த ஓனர் "என்னால் எதுவும் செய்ய முடியாது என்னை மிரட்டி ஒருவர் இந்த பேக்டரியை வாங்கி கொண்டார். இந்த ஊரில் மிகவும் செல்வாக்கு உள்ள நபர்" என பேக்டரி ஓனர் சொல்ல சக்தி அவரிடம் எகிறுகிறான். "இப்போது அவர் இங்கு வருவார் வந்தவுடன் நீங்களே பேசிக்கொள்ளுங்கள்" என சொல்லிவிடுகிறார் பேக்டரி ஓனர்.
அந்த சமயத்தில் புதிய என்ட்ரியாக சீரியலில் என்ட்ரி கொடுக்கிறார் கிருஷ்ணசாமி மெய்யப்பன் கதாபாத்திரம். மிகவும் சாதாரண ஒரு கெட்டப்பில் நுழைந்து இருக்கும் கதாபாத்திரம் ஜனனி மற்றும் சக்தியிடம் மிகவும் திமிராக பேசுகிறான். "நான் வலியவன் அதனால் எளியவன் கிட்ட இருந்து எடுத்துக்குவேன்" என பஞ்ச் டயலாக் எல்லாம் பேசி விட்டு செல்கிறான்.
"அவன் மட்டும் இல்லை அவனோட மொத்த குடும்பமே மிகவும் மோசமான குடும்பம். எதற்கு தேவையில்லாத பிரச்சினை" என பேக்டரி ஓனர் சொல்ல ஜனனி அதெல்லாம் விட முடியாது என சொன்னதால் ஓனர் அவனுடைய அட்ரஸ் கொடுத்து அனுப்புகிறார்.
ஜீவானந்தம் ஈஸ்வரியிடம் கோபமாக பேசுகிறார். "இப்போது தான் புரிகிறது நீங்கள் அனைவரும் ஏன் என் மகள் மீது இத்தனை பாசத்தை பொழிகிறீர்கள் என்பது. உங்களின் குற்றவுணர்ச்சி தான் இப்படி செய்ய வைத்துள்ளது. அன்று நந்தினி அழுததற்கு காரணம் இது தான். ஏன் என்னிடம் இத்தனை நாட்களாக இந்த உண்மையை மறைத்தீர்கள். உங்கள் கணவரின் உயிருக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது அது தானே காரணம். நன்றாக புரிந்து கொள்ளுங்கள் அவர்கள் இருவரையும் நான் முடித்தே தீருவேன்" என பயங்கர கோபமாக பேசுகிறார் ஜீவானந்தம்.
"இனி என்னையும் என்னுடைய மகளையும் பார்ப்பதற்காக இங்கே வரவேண்டாம். நாங்கள் இப்போதே இங்கு இருந்து சென்று விடுவோம். முதலில் இங்கிருந்து கிளம்புங்க" என ஜீவானந்தம் சொல்ல ஈஸ்வரி அங்கிருந்து கிளம்பி விடுகிறாள் ஈஸ்வரி. அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோட் முடிவுக்கு வந்தது.