சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய (அக்டோபர் 14) எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
வீட்டுக்கு வந்த அப்பத்தாவிடம் நந்தினி வருத்தப்பட்டு பேசுகிறாள். இருந்த ஒரே நிம்மதியே அந்த சமையல் அறைதான் அதையும் பிடுங்கி ஜான்சி ராணியிடம் அவளின் மாமியார் கொடுத்ததால் புலம்புகிறாள். அப்பத்தா அவர்களுக்கு அறிவுரை வழங்குகிறார். ஜனனியின் அப்பா வந்து ஜனனியை திட்டியதை பற்றி அப்பத்தாவிடம் சொல்கிறார்கள். ஜனனி அவரிடம் சவால் விட்டதற்காக அவளை பாராட்டுகிறார் அப்பத்தா. இருப்பினும் நாச்சியப்பனின் கோபமும் நியாயம்தான் என்கிறார் அப்பத்தா. அவரின் ஆசையை நிறைவேற்றி காட்டு என சொல்கிறார் அப்பத்தா.
அதை தொடர்ந்து அவர் ஒரு பன்க்ஷனுக்கு ஏற்பாடு செய்து இருப்பது பற்றி சொல்லி ஒரு பைலை ஈஸ்வரியிடம் கொடுத்து படிக்கச் சொல்கிறார். அதை படித்து பார்த்த ஈஸ்வரி இவர்கள் திருவிழாவிற்கு ஏற்பாடு செய்த அதே நாள், அதே நேரம் அதே ஊரில் அப்பத்தாவும் இந்த பங்க்ஷன் ஏற்பாடு செய்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். மேலும் இந்த விழாவுக்கு தலைமை தாங்க வரப்போவது ஜீவானந்தம் என சொல்லி மேலும் பெரிய ஷாக் கொடுக்கிறார். மேலும் நீங்கள் அனைவரும் வந்து கலந்து கொண்டு சிறப்பாக பேச வேண்டும் என மருமகள்களிடம் சொல்கிறார் அப்பத்தா.
அந்த நேரத்தில் கதிர், ஞானம் மற்றும் விசாலாட்சி அம்மாவும் அப்பத்தா பேசுவதை கேட்டு விடுகிறார்கள். அதை கேட்டு கதிர் கைதட்டி சந்தோஷப்படுகிறான். விசாலாட்சி அம்மா அப்பத்தாவை இப்படி செய்ததற்காக திட்டுகிறார். அண்ணனுக்கும் இதில் சந்தோஷம்தான் அதை தான் அவரும் எதிர்பார்க்கிறார் என கதிர் உற்சாகமாக பேசி அப்பத்தாவை வெறுப்பேத்துகிறான். அவர் வரட்டும் மாலை மரியாதை எல்லாம் செய்துவிடுவோம் என்கிறான் கதிர்.
இரவு கதிரும் ஞானமும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் பேசுவதை ஈஸ்வரி மாடியில் இருந்து கேட்டு கொண்டு இருக்கிறாள். ஜீவானந்தம் அவனா வந்து வலையில் மாட்டிக்கொள்ள போகிறான். அவனை அங்கேயே முடிக்க வேண்டியது தான் என்கிறான். அப்போது வக்கீல் போன் செய்து குணசேகரன் உங்களை போய் வளவனை பார்த்து விட்டு வர சொன்னதாக சொல்கிறார். கதிருக்கு வளவன் யார் என்பது தெரியாமல் கேள்வி கேட்க ஏதோ அவனை குழப்பி விட்டு சென்று விடுகிறான் கதிர்.
ஈஸ்வரி ஜீவானந்தத்தை சந்திப்பதற்காக வேகவேகமாக செல்கிறாள். ஜனனியும் சக்தியும் பேங்க் வேலையாக செல்கிறார்கள். அபசகுனமாக ஜான்சி ராணி தேவையில்லாமல் அனைவரையும் வெறுப்பேத்தி கொண்டு இருக்கிறாள். ஈஸ்வரியை பார்த்ததும் வெண்பா வந்து ஈஸ்வரியை கட்டிக்கொள்கிறாள். என்ன விஷயம் சொல்லாமல் வந்து இருக்கிறீர்களே என ஜீவானந்தம் கேட்க பேசணும் என தோணுச்சு என ஈஸ்வரி சொல்கிறாள். வெண்பா இன்று தன்னுடைய அம்மாவின் பிறந்தநாள் என சொல்கிறாள். அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோட் முடிவுக்கு வந்தது.