சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலின் நேற்றைய எபிசோடில் மீண்டும் குணசேகரனைக் காணவில்லை என்பதால் பரபரப்பு எகிறியுள்ளது. 


குணசேகரன் போலீஸ் இன்ஸ்பெக்டரை அடித்ததை யாரோ ஒருவர் வீடியோ எடுத்து வைரலாக்கியதால் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். அவரைத் தேடி பின்னாலேயே சென்ற தம்பதி, கதிருக்கும் ஞானத்திற்கும் போலீஸ் ஸ்டேஷனில் அதிர்ச்சி காத்திருந்தது. சாட்சியுடன் குணசேகரன் பிடிபட்டதால் அவரை நேரடியாக நீதிபதியின் வீட்டுக்கு அழைத்துச் சென்று இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.


வீட்டில் மாமியார் விசாலாட்சி அம்மா ஈஸ்வரியிடம், “புருஷன் காணாமல் போனதைப் பற்றி உனக்கு ஒரு வருத்தமும் இல்லை. நீயும் உன்னுடைய பிள்ளைகளும் சேர்ந்து கூத்தடிக்கிறீர்கள்..” என சொல்லி அவமானப்படுத்த, பொங்கி எழுந்த ஈஸ்வரியை ஜீவனந்தத்தோடு சம்பந்தப்படுத்தி விசாலாட்சி அம்மா பேசவே, கோபமான தர்ஷனும் தர்ஷினியின் அம்மாவுக்கு ஆதரவாக அப்பத்தாவை எதிர்த்து பேசுகிறார்கள். 


ஜனனியின் அப்பா வீட்டுக்கு வர அவரை பார்த்து சந்தோஷப்படும் ஜனனியிடம் பேசாமல் ஒதுக்குகிறார் ஜனனியின் அப்பா. தன்னுடைய மகளுக்கு திருமணம் வைத்து இருப்பதால் அதற்கு சம்பந்திக்கு அழைப்பிதழ் வைப்பதற்காக வந்துள்ளதாகவும் ஜனனியுடன் பேச விருப்பம் இல்லை என சொன்னதும் ஜனனியின் முகம் வாடிப்போகிறது. 


அத்துடன் நேற்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது. தொடர்ந்து இன்றைய எபிசோடில் நடப்பதாவது: நீதிபதி வீட்டுக்கு விரைந்த குணசேகரனின் தம்பிகள் அங்கே காவலுக்கு இருந்து போலீஸ்காரரிடம் "குணசேகரன் என்ற பெயரில் யாரையாவது கூட்டிட்டு வந்தார்களா?" என ஞானம் கேட்க "அவரை ஜெயிலுக்கு கூட்டிட்டு போயிட்டாங்க" என்கிறார் போலீஸ். "மாமா வராமல் இந்த இடத்தை விட்டு நகர மாட்டேன். தர்ணா பண்ண போகிறேன்" என கரிகாலன் எகிறுகிறான். 


வீட்டில் திருமண பத்திரிக்கை வைக்க வந்த ஜனனியின் அப்பாவிடம் ஜான்சி ராணி "பொம்பள பிள்ளையை படிக்க வச்சா வீடு கெட்டு போயிடும். அதுக்கு இந்த குடும்பம் தான் உதாரணம்" என்கிறாள். அதைக்கேட்டு கோபமான ரேணுகா "படிப்பை பத்தி பேச உனக்கு அருகதையே இல்லை" என சொல்ல மோதல் ஏற்படுகிறது. அதனால் பொறுமை இழந்த ஜனனி "போதும் ஸ்டாப் இட்" என கத்துகிறாள். அப்பாவின் கையை பிடித்து இழுத்து "உங்க கிட்ட கொஞ்சம் பேசணும் வாங்க" என அழைக்க அவர் ஜனனியின் கையை உதறி விட்டு "விடு என் கையை. என்னோட பொண்ணுக்கு கல்யாணம். அதை சொல்லிட்டு போக தான் வந்தேன்" என்கிறார். இது தான் இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ஹிண்ட். 


 


 



வந்த வேகத்திலேயே காணாமல் போய்விட்டாரே புதிய குணசேகரன் என்பதால் மிகுந்த குழப்பத்தில் இருக்கிறார்கள் எதிர்நீச்சல் தீவிர ரசிகர்கள்.  ஒரு கதாபாத்திரத்தில் நடித்த நடிகரின் மறைவால் ஒட்டுமொத்த கதைக்களத்தையே வேறு திசையில் திருப்பிய முதல் சீரியல் இந்திய தொலைக்காட்சி வரலாற்றிலேயே இதுவாக தான் இருக்கும்.