சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய எபிசோடில் குணசேகரன் ஈஸ்வரியை எலெக்ஷனில் நிற்க  வைக்க முடிவெடுக்கிறார். இதனால் மிகுந்த அதிர்ச்சியில் இருக்கிறார்கள் வீட்டு பெண்கள். ஜனனி ஈஸ்வரியிடம் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள சொல்கிறாள். ஆனாலும் ஈஸ்வரிக்கு சற்று தயக்கமாகவே இருக்கிறது.





அடுத்த நாள் காலை கேண்டிடேட் யார் என்ற அறிவிப்பை தெரிவித்து வரலாம் என ஈஸ்வரியை குணசேகரன் அழைக்க "எனக்கு எலெக்ஷனில் நிற்க விருப்பமில்லை" என தெரிவித்து விடுகிறாள் ஈஸ்வரி. குணசேகரன், ஜனனியிடம் சொல்லி ஈஸ்வரியை சம்மதிக்க வைக்க சொல்லி சொல்கிறார். ஜனனியும் ஈஸ்வரியை தனியாக அழைத்து சென்று "உங்களால் எல்லாத்தையும் சமைக்க முடியும். நீங்கள் திறமையானவர். அதனால் இந்த எலெக்ஷனில் நிற்க சம்மதம் சொல்லுங்கள்" என்கிறாள் ஜனனி. பலமுறை யோசித்த பிறகு ஈஸ்வரியும் இதற்கு சரி என்கிறாள்.அத்துடன் நேற்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது.



அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

ஈஸ்வரியை கேண்டிடேட்டாக அறிவிப்பதற்காக குணசேகரன் செல்ல அவரது தம்பிகளும் உடன் செல்கிறார்கள். ஈஸ்வரியுடன் ஜனனியும் சக்தியும் செல்கிறார்கள். அங்கே எஸ்.கே.ஆர், அரசு மற்றும் சாருபாலாவும் வந்து இருக்கிறார்கள்.

ஈஸ்வரி எலெக்ஷனில் நிற்க போவதை அறிந்த சாருபாலா "யாருடைய நிர்பந்தமும் இல்லாமல் நான் இந்த தேர்தலில் நிற்க போகிறேன். அதே மாதிரி என்னை எதிர்த்து நிற்க போகும் ஈஸ்வரியால் சொல்லமுடியமா?" என நக்கலாக கேட்கிறார்.


 




தேவையில்லாத வாக்குவாதம் நடக்க "எங்க வழியில குறுக்க வந்ததால தான் உன்னோட தம்பி காலை உடைச்சுக்கிட்டு திரியுறான்" என அரசை பார்த்து கதிர் திமிராக பேச "அதுக்கு காரணம் யாருனு நல்லாவே தெரியும்" என்கிறார் அரசு.  


 




இப்படியே மாறி மாறி பேசி பிரச்சினை பெருசாக ஆபீசர்கள் அங்கே வந்து என்ன பிரச்சினை என விசாரிக்கிறார்கள். இதனால் கோபப்பட்ட சக்தி "இது தான் சார் முடிவு, கடைசில ஓட்டுபோடுறவங்க ஜெயிக்க போறாங்க. ஆகவேண்டிய வேலையை பாருங்க" என ஆபீசர்களிடம் சொல்லி அனுப்புகிறான் சக்தி. இது தான் இன்றயை எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ப்ரோமோ ஆக வெளியாகியுள்ளது.