சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய எபிசோடில் ஜனனியும் சக்தியும் அப்பத்தா விபத்தில் எறிந்த இடத்திற்கு சென்று அங்கு அவர் உடல் சிதறிக் கிடப்பதை பார்த்து கதறி கதறி அழுகிறார்கள். அப்பத்தாவின் வளையல், புடவையை பார்த்து கொந்தளித்த ஜனனி, குணசேகரனை சும்மா விடவே மாட்டேன் என சத்தியம் செய்கிறாள். ஈஸ்வரி ஜீவனந்தத்தை சென்று சந்தித்துப் பேசுகிறாள். ஜீவானந்தம் அப்பத்தா இறந்தது உண்மை தான் என்றும் இதை குணசேகரன் எந்த ஒரு ஆதாரமும் கிடைக்காத அளவிற்கு க்ளீனாக பிளான் செய்து முடித்தது பற்றியும் சொல்லி ஈஸ்வரிக்கு அதிர்ச்சி கொடுக்கிறார்.
வீட்டுக்கு வந்து சேர்க்கிறார்கள் விசாலாட்சி அம்மா மற்றும் பிள்ளைகள். ரேணுகாவும் நந்தினியும் மூளையில் சோகமாக அமர்ந்து இருப்பதை பார்த்து விசாலாட்சி அம்மா என்ன நடந்து அப்பத்தா எங்கே எனக் கேட்கிறார். ரேணுகா அப்பத்தா எரிந்து போனதை பற்றி சொன்னதும் அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். அத்துடன் நேற்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது.
அதன் தொடர்ச்சியாக இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
ஜனனியும் சக்தியும் வீட்டுக்கு வருகிறார்கள். நந்தினியிடம் அப்பத்தாவின் புடவையைக் கொடுத்து "இவங்க எல்லாரும் சேர்ந்து அப்பத்தாவை கொன்னுட்டாங்க அக்கா" என சொல்லி அழுகிறாள். அதைப் பார்த்து ஒட்டுமொத்த குடும்பமே கதறுகிறது. "ஜஸ்ட் மிஸ் அத்தை. எல்லாரும் பீஸ் பீஸாகியிருப்போம்" என கரிகாலன் சொல்ல "அப்படி தானே சொல்லி ஊற ஏமாத்தி வைச்சு இருக்கீங்க" என சொல்லி சக்தி கரிகாலனிடம் எகிறுகிறான்.
ஈஸ்வரி வந்து விசாலாட்சி அம்மாவிடம் "ஜீவானந்தத்தை போலீஸ் அரெஸ்ட் பண்ணிடுச்சு" என சொல்ல, கோபமான விசாலாட்சி அம்மா "இன்னும் அவனுக்காக வக்காலத்து வாங்கி அலையுறீயா? அப்படி என்னடி வசியம் பண்ணிட்டான் அவன்" என அநாகரீகமாக விசாலாட்சி அம்மா பேச, "போதும் அத்தை நிறுத்துங்க" என மாமியாரையே எதிர்த்து கத்துகிறாள் ஈஸ்வரி. இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal ) எபிசோடுக்கான ஹிண்ட்.