சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய எபிசோடில் அப்பத்தாவை எங்கே அழைத்து சென்றார்கள் என குழப்பத்தில் அனைவரும் இருக்க அந்த நேரத்தில் கதிர், கரிகாலன் மற்றும் ஞானம் அழுதுகொண்டே வேறு ஒரு காரில் வந்து இறங்குகிறார்கள். ஒரு மாதிரி வந்த அவர்களிடம் சக்தி, ரேணுகா, நந்தினி மாறிமாறி கேட்க அவர்கள் மூவரும் எதுவுமே பேசாமல் பேய் அறைந்தது போல இருக்கிறார்கள்.
உள்ளே சென்ற ஞானம் அழுது கொண்டே அப்பத்தா இறந்ததைப் பற்றி சொல்கிறான், அதை கேட்டு அனைவரும் அதிர்ச்சியடைகிறார்கள். ஆனால் நம்பிக்கை இல்லாத சக்தி ஞானத்தையும், கதிரையும் "என்னடா பண்ணீங்க அப்பத்தாவ... உண்மையை சொல்லுங்க" என மிரட்டி கேட்கிறான். ஞானம் என்ன நடந்து என்பதை சொல்கிறான்.
யாரோ மறைந்து இருந்து காரை துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே இருக்கே நங்கள் அனைவரும் காரை விட்டு கீழே இறங்கினோம். யார் என தேடி பார்க்க சென்ற நேரத்தில் காரை எரித்து விட்டார்கள். காருடன் சேர்ந்து அப்பத்தா எரிந்து போனதை பற்றி சொல்கிறான் ஞானம். அதைக் கேட்ட அனைவரும் அதிர்ச்சியில் அழுது புலம்புகிறார்கள்.
குணசேகரன் இவர்களுடன் வராததால் சந்தேகம் எழுகிறது. ஜீவானந்தத்திற்கு போன் போகவில்லை. அதனால் ஜனனியும் சக்தியும் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று பார்க்கலாம் என கிளம்புகிறார்கள். ஈஸ்வரி மறுபக்கம் வெளியில் கிளம்புகிறாள். நந்தினியும் ரேணுகாவும் புலம்புகிறார்கள். அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது.
அதன் தொடர்ச்சியாக இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
அப்பத்தாவுக்கு என்ன ஆனது? இவர்கள் சொல்வதை நம்பமுடியாது என்பதால் நேரிடியாக அந்த இடத்திற்கு சென்று பார்த்துவிட்டு வரலாம் என சக்தியும் ஜனனியும் கிளம்புகிறார்கள். போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று இன்ஸ்பெக்டரிடம் "சம்பவம் நடந்த அந்த இடம் எங்கு இருக்கிறது. நாங்கள் ஒரு முறை நேரில் சென்று பார்க்க வேண்டும்" என்பதை கேட்டறிகிறார்கள்.
வீட்டில் அப்பத்தா இறந்த துக்கம் தாங்காமல் கதறி கதறி அழுகிறாள் நந்தினி. ரேணுகா அவளை சமாதானம் செய்தாலும் "அப்பத்தா ஒரு பக்கம், அந்த பொண்ணு ஒரு பக்கம்... எங்க அக்கா போனாரு அவரு" என அழுது புலம்புகிறாள்.
ஈஸ்வரி நேராக ஃபர்ஹானாவை சென்று சந்திக்கிறாள். அவள் மூலம் ஜீவானந்தத்தை தொடர்பு கொள்கிறாள் ஈஸ்வரி. "இப்ப இந்த நம்பரில் இருந்து உங்களுக்கு ஒரு லொகேஷன் அனுப்புறேன். கிளம்பி அங்க வந்துருங்க" என ஈஸ்வரியிடம் சொல்கிறார் ஜீவானந்தம்.
சக்தியும் ஜனனியும் அப்பத்தா காருடன் சேர்ந்து எரிந்ததாக சொல்லப்படும் இடத்தை போய் பார்க்கிறார்கள். அங்கே எரிந்து கொண்டு இருப்பதை பார்த்து ஜனனி கதறி அழுகிறாள். இது தான் இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ஹிண்ட்.
அப்பத்தா எரிந்ததாக சொல்லப்படுவதும் ஒரு ட்ராமாவாக இருக்குமோ? இதற்கு பின்னணியில் இருப்பது ஜீவானந்தமா அல்லது குணசேகரனா? இன்றைய எபிசோடில் இதற்கான விளக்கம் கிடைக்கும் என ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கிறார்கள் எதிர்நீச்சல் ரசிகர்கள்.