சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய எபிசோடில் அப்பத்தா நடத்தும் விழாவில் அனைவரும் கலந்து கொள்கிறார்கள். என்ன நடக்கப் போகிறது, அப்பத்தா 40% ஷேரை என்ன செய்ய போகிறார், கெளதம் ஒரு பக்கம் குணசேகரனையும் கதிரையும் கொன்றே தீருவேன் என வெறியுடன் இருக்கிறான்.


அவன் இந்த பன்க்ஷனுக்கு நிச்சயம் வருவான் என்பதால் சக்தி கௌதமை தேடி கொண்டு செல்கிறான். ஆனால் சக்தியை பார்த்ததும் கெளதம் அவனிடம் இருந்து எஸ்கேப்பாகி ஓடி விடுகிறான். மறுபக்கம் அப்பத்தாவையும் , ஜீவானந்தத்தையும் போட்டுத்தள்ள குணசேகரன் செட் பண்ண ஆளும் வருகிறான்.

பலத்த வரவேற்புடன் அப்பத்தா மேடை ஏறுகிறார். தன்னுடைய வாழ்க்கையைப் பற்றி பேசும் போது பல ஏமாற்றங்களை சந்தித்ததாகவும், பேரன் குணசேகரன் தான் நம்பிக்கை கொடுத்ததாகவும் சொல்கிறார். ஜனனி வந்ததற்கு பிறகு தான் வீட்டில் சில மாற்றங்கள் நடந்தது என கூறுகிறார்.





மருமகள்களை மேடைக்கு அழைத்து நிற்கவைக்க குணசேகரன் கொந்தளிக்கிறார். அப்பத்தா துவங்கியுள்ள நிறுவனத்திற்கு யார் யாரை நியமித்து இருக்கிறார் என்பதை சொல்லவும், குணசேகரன் முகம் அப்படி கொழுந்து விட்டு எரிகிறது. இப்படி நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று கொண்டு இருக்க, கெளதம் எப்படியோ சக்தியின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு பங்க்ஷன் நடக்கும் இடத்திற்கு வந்து விடுகிறான். குணசேகரன் மீதும் கதிர் மீதும் குறியை வைக்கிறான். அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் எபிசோட் முடிந்தது.

அதன் தொடர்ச்சியாக இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

இன்றைய எபிசோடில் அப்பத்தாவின் 40% சொத்து யாருக்கென முடிவெடுத்துள்ளார் என்ற தகவல் இன்று தெரிய வரும். பல மாதங்களாக மிகவும் சஸ்பென்ஸாக இருந்த இந்த விஷயம் இன்று தெரிய வரப்போவதால் சீரியலில் இருப்பவர்களுக்கு மட்டுமில்லாமல் ரசிகர்களும் மிகவும் ஆவலாக இருக்கிறார்கள்.


 




அப்பத்தா பெண்களுக்கான ஒரு எழுச்சி அமைப்பை துவங்கியுள்ளார். அப்போது மேடையில் அப்பத்தா பேசுகையில் "என்னோட 40% ஷேரை யாருக்கு கொடுக்க போறேன்னா" என சொல்லி ஏதோ ட்விஸ்ட் வைக்க, அதை சற்றும் எதிர்பார்க்காத குணசேகரனும், கதிரும் அதிர்ச்சி அடைகிறார்கள். அதை கேட்ட ஜான்சி ராணி "அப்ப நமக்கு" என முந்திக்கொண்டு வருகிறாள். மேடையில் நின்று கொண்டு இருந்த நந்தினியும் ரேணுகாவும் சந்தோஷப்படுகிறார்கள்.

அந்த நேரத்தில் அப்பத்தா குணசேகரனை மேடைக்கு அழைத்து ஜீவானந்தத்திற்கு அன்பு பரிசு கொடுக்க சொல்லி அழைக்கிறார். குணசேகரனும் எரிந்து கொண்டே மேடையில் ஏறுகிறார். மேலே மறைந்து நின்று கொண்டு இருந்த கெளதம் குணசேகரன் மீது குறி வைத்து சுடுகிறான். துப்பாக்கி குண்டு யார் மீது பாய்ந்தது என தெரியவில்லை. அனைவரும் அப்படியே அதிர்ச்சி அடைகிறார்கள். இது தான் இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ஹிண்ட்.


 




சுடப்பட்டது யார்? என்பது ஒரே சஸ்பென்சாக இருக்கிறது. இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான எதிர்பார்ப்பை தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோ அதிகரித்துள்ளது.