விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) தொடரின் இன்றைய எபிசோடில் செழியன் எழிலிடம் சென்று மன்னிப்பு கேட்கிறான். "நான் செய்தது ரொம்ப பெரிய தப்பு. நான் ஜெனியையும் குழந்தையும் பார்க்கணும். நான் போன் பண்ணா எடுக்க மாட்டா. நீ போன் பண்ணி பேசுடா" என எழிலிடம் கெஞ்சுகிறான் செழியன். ஆனால் எழில் செழியனை பயங்கரமாக திட்டுகிறான்.


"என்னோட ஜெனி வீட்டுக்கு வா" என செழியன் எழிலிடம் கேட்க, எழில் "என்னால் முடியாது" என சொல்லி விடுகிறான். பிறகு செழியன் ஜெனி வீட்டுக்குச் செல்கிறான். அங்கே சென்று ஜெனி வீட்டு கதவைத் தட்ட ஜெனி வந்து திறந்து பார்த்து கதவை படார் என மூடிவிட்டுச் சென்று விடுகிறாள். ஜெனியின் அம்மா வந்து "ஜெனி உன்னோடு பேச மாட்டா. அவளே பேசுறேன் என சொன்னாலும் நான் அவளை பேச விடமாட்டேன். உன்னை நம்பி வந்த பொண்ணு ஜெனி. அவளை எப்படி ஏமாத்த மனசு வந்தது" என ஜெனியின் அம்மா திட்டுகிறார்.



பாக்கியா வந்து ஈஸ்வரியையும் ராமமூர்த்தியையும் சாப்பிட அழைக்கிறாள். ஈஸ்வரி பாக்கியாவை திட்டுகிறார். அப்போது ஜெனியின் அம்மா ஈஸ்வரிக்கு போன் செய்து "செழியன் இங்க வந்து பிரச்சினை பண்ணிக்கிட்டு இருக்காரு" எனச் சொல்கிறார். "ஜெனியை பார்க்க தானே வந்தான். அவனோட பொண்டாட்டி தானே பார்க்க விடுங்க. எதுக்கு கோபப்படுறீங்க?" என ஈஸ்வரி சொல்ல, "அந்த பொண்ணோட ஊர் சுத்தும் போது இது தெரியாதா?. நானா இருக்கவே போன் பண்ணி சொல்றேன். வேற யாராவது இருந்தா இந்நேரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் இருப்பாங்க " என ஜெனியின் அம்மா சொல்ல ஈஸ்வரி அதிர்ச்சி அடைகிறார்.

கோபி சென்று நான் போய் செழியனை கூட்டிட்டு வருகிறேன் என சொல்ல, ஈஸ்வரி மறுபடியும் பாக்கியாவை திட்டுகிறார். அதைக் கேட்ட ராதிகா வெளியில் வந்து "எல்லாத்தையும் நான் கேட்டுட்டு தான் இருந்தேன். நீங்க செய்யுறது ரொம்ப தப்பு" என சொல்ல "உன்னை யார் வர சொன்னா...நீ உள்ள போ" என ராதிகாவை திட்ட ராமமூர்த்தியும் "நீ வேற ஏன் மா?" என சொல்லி ராதிகாவை ரூமுக்கு போக சொல்கிறார்,



எழில் பாக்கியாவுக்கு சப்போர்ட் செய்து ஈஸ்வரியிடம் சண்டை போடுகிறான். கோபி போய் செழியனை காரில் அழைத்து வருகிறார். "அம்மா எத்தனையோ தடவை என்னை வார்ன் பண்ணாங்க. ஜெனிக்கு நீ பண்றது துரோகம். போய் அவகிட்ட சொல்லு. அவங்க எல்லாருக்காகவும் பார்த்தாங்க. இப்போ என்னால அவங்களுக்கும் பிரச்சினை" என சொல்லி அழ, பாக்கியா பற்றி கோபிக்கு அப்போது தான் உண்மை புரிகிறது.


பாக்கியா ஜெனிக்கு போன் செய்து பார்க்கிறாள். ஜெனி எடுக்காததால் அவளுடைய அம்மாவுக்கு போன் செய்கிறார். போனை எடுத்த ஜெனியின் அம்மா "உங்களுக்கு வந்த அதே நிலைமை தான் இப்போ என்னோட பொண்ணுக்கும் வந்திருக்கு" என சொல்லவும் பாக்கியா அதிர்ச்சி அடைகிறாள். அத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி ( Baakiyalakshmi )எபிசோட் முடிவுக்கு வந்தது.