சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய (மார்ச் 8) எபிசோடில் சக்தி போலீஸ் ஸ்டேஷன் வருகிறான். ஜனனியை விட சொல்லி போலீசிடம் சொல்கிறான். ஆனால் இன்ஸ்பெக்டர் அவங்க மேல சந்தேகம் இருக்கு அதனால விட முடியாது என சொல்கிறார்.

தர்ஷினியை, ஜீவானந்தம் ஹாஸ்பிடல் அழைத்துச் சென்று ட்ரீட்மென்ட் கொடுக்கிறார். பயத்தில் தர்ஷினி புலம்புகிறாள். டாக்டரிடம் தர்ஷினிக்கு நடந்தது பற்றி ஜீவானந்தம் சொல்கிறார். "தர்ஷினி மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறாள். அவளுக்கு மயக்க மருந்து கொடுத்து உடம்பைக் கெடுத்து வைச்சு இருக்காங்க. பெரிய ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்று டிரீட்மென்ட் செய்யுங்கள்" என சொல்கிறார் டாக்டர்.


 




நியூஸில் ஜீவானந்தம் தர்ஷினியை கடத்தியதாகவும், அவரைக் கண்டதும் உடனே சுட்டு பிடிக்க ஆர்டர் போட்டு இருப்பது பற்றியும் செய்திகளில் வருகிறது. அதைப் பார்த்த டாக்டர் "உடனே இந்த பொண்ணை நீங்க போலீசில் ஒப்படைத்துவிடுங்கள். என்னுடைய கார் வெளியில் இருக்கிறது அதை எடுத்து கொண்டு செல்லுங்கள்" என சொல்கிறார் மருத்துவர்.

வீரசங்கிலியின் ஆள் ஒருவன் கான்ஸ்டபிளிடம் இருந்து போனை திருடி விடுகிறான். ரவுடிக்கு போன் செய்து "ஜீவானந்தத்தையும் தர்ஷினியையும் போட்டு தள்ளிடு. அப்ப தான் நாம போலீசிடம் இருந்து தப்பிக்க முடியும். உனக்கு நான் செட்டில்மென்ட் பண்ணிடுறேன். அந்த பொண்ணோட அப்பன் தான் அந்த பொண்ணை கடத்த சொன்னான்" என சொல்கிறான்.

"ஜனனி ஜீவானந்தம்கூட கூட்டு சேர்ந்து சதி பண்ணி இருக்காங்க. எங்களுக்கு  அவங்க மேல சந்தேகமா இருக்கு" என்கிறார் இன்ஸ்பெக்டர். தர்ஷினி பற்றி தகவல் வந்ததும் நான் சொல்லி அனுப்புறேன் என குணசேகரனை வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார். அவர் போகும் போது ஜனனியை விட்டு தொலைங்க என சொல்லிவிட்டு போகிறார்.

விசாலாட்சி அம்மா தர்ஷினி பற்றி எந்தத் தகவலும் இல்லை என வருத்தப்பட்டு பேசிக்கொண்டு இருக்கிறார். அப்போது குணசேகரன் வீட்டுக்கு வந்து இறங்குகிறார். தம்பிகளை அதட்டி அழைத்து தற்போது ஜீவானந்தம் தான் தர்ஷினியை கடத்தி வைத்திருப்பது பற்றி போலீஸ் கண்டுபிடித்தது பற்றி சொல்கிறார். வீடியோவில் பார்த்தது பற்றி சொல்கிறார். அதைக் கேட்டு அனைவரும் குழப்பம் அடைகிறார்கள். ஆனால் கதிர் நல்லா கதை சொல்றீங்க என நக்கலாக பேசுகிறான். அத்துடன் நேற்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது.  

அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

சக்தியும் ஜனனியும் வீட்டுக்கு வருகிறார்கள். ரேணுகா, நந்தினி, கதிர் மற்றும் ஞானம் அங்கே வாசலில் உட்கார்ந்து இருக்க அவர்களிடம் சக்தி கோபமாக பேசுகிறான். "ஒன்னு மட்டும் தெளிவா சொல்றேன் நல்லா கேட்டுக்கோங்க. நமக்குள்ள ஒற்றுமை இருந்தா மட்டும் தான் இந்த விஷயத்தில் நம்ம ஜெயிக்க முடியும்" என்கிறான்.


 




"குடும்ப மானத்தைக் கெடுப்பதற்காகவே போலீஸ் ஸ்டேஷனில் நீ அப்படி பேசுனியா? " என குணசேகரன் ஜனனியைப் பார்த்து கேட்கிறார். "குடும்ப மானத்தை எல்லாம் நான் கெடுக்கவில்லை" என அவரை எதிர்த்து துணிந்து பேசுகிறாள் ஜனனி.


 





ஜீவானந்தம் தர்ஷினியை அழைத்துக் கொண்டு போலீசிடம் இருந்து தப்பித்து செல்கிறார். "சீக்கிரம் போய் விடலாம் பயப்படாதே" என ஆறுதல் சொல்கிறார். அப்போது போலீஸ் டீம் வந்து அவர்களுடைய காரை ரவுண்ட் அப் செய்து விடுகிறது. இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ஹிண்ட்.