சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal ) தொடரின் நேற்றைய (மார்ச்.05) எபிசோடில் வீர சங்கிலி போலீசை மிரட்டி அனுப்பி விடுகிறான். "குணசேகரன் சொன்னது போல போலீஸ் நம்மைத் தேட ஆரம்பிச்சுட்டாங்க. அந்தப் பொண்ணை உடனே இடம் மாத்தணும்" என்கிறான் வீர சங்கிலி. வீட்டில் ஞானம் , ரேணுகா மற்றும் ஐஸ்வர்யா சாப்பிடுவதற்காக வெளியில் கிளம்ப, கதிர் வந்து "அந்த சண்டையை பத்தியே நினைச்சுகிட்டு இருக்கீங்களா? வந்து சாப்பிடுங்க" என சொல்ல ஞானம் தேவையில்லாமல் எதை எதையோ பேசி சண்டையை பெருசாக்குகிறான். நந்தினி, ரேணுகாவிடம் மன்னிப்பு கேட்கிறாள். கதிர் அவளை அடக்கி உள்ளே அழைத்து செல்கிறான். ஞானம் தாராவையும் அவர்களுடன் அழைத்துச் செல்ல கூப்பிடுகிறான் ஆனால் கதிர் அவளை ஞானத்துடன் அனுப்பவில்லை. அங்கு நடக்கும் கூத்தைப் பார்த்து ஜான்சி ராணியும் கரிகாலனும் சந்தோஷப்படுகிறார்கள்.
தர்ஷினி தப்பித்துப் போனதை பார்த்து ரவுடிகள் அதிர்ச்சி அடைகிறார்கள். வீர சங்கிலிக்கு இந்த விஷயம் தெரிந்ததும் அதிர்ச்சி அடைகிறான். அதற்குள் போலீஸ் டீமும் அங்கே வந்துவிடுகிறது. அவர்களைப் பார்த்ததும் ரவுடிகள் தப்பித்து ஓடிவிடுகிறார்கள். தர்ஷினியை அடைத்து வைத்திருந்த இடம் அது தான் தெரிந்து கொண்டு அவர்களைத் தேடி போலீஸ் எல்லா பக்கமும் ஓடுறாங்க. அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது. அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. வீர சங்கிலி குணசேகரனுக்கு போன் செய்து தர்ஷினி தப்பித்துப் போனதை பற்றி சொல்கிறான். "எங்க எல்லாரையும் போலீஸ் கட்டம் கட்டி தூக்க போறாங்க" என புலம்புகிறான். அந்த நேரத்தில் கொன்றதை வந்து வீர சங்கிலியை கைது செய்கிறார்.
இப்போது தர்ஷினியை கடத்திய பழி, ஜீவானந்தம் பக்கம் திரும்பியது. தர்ஷினியின் நிலை என்ன? இப்படியாக பரபரப்புடன் நகர்கிறது எதிர்நீச்சல் (Ethirneechal ) தொடர்.