சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய (மார்ச் 3) எபிசோடில் வீரசங்கிலி, தர்ஷினியை கடத்தி வைத்திருந்த பழைய ரவுடியை பார்த்து மிரட்டிவிட்டு எதிர்ப்பக்கமாக செல்கிறான். ஜனனியுடன் வந்த போலீஸ் டீம் வீரசங்கிலியை பின்தொடர்ந்து செல்கிறார்கள்.



குணசேகரன் வீட்டுக்கு வந்த ஆதிரை அங்கிருந்த கரிகாலன் மற்றும் ஜான்சியை பார்த்து கோபமாகி வீட்டை விட்டு வெளியே விரட்டுகிறாள். குணசேகரன் ஆதிரையை அவமானப்படுத்தி பேசுகிறார். "இது என்னுடைய வீடு யார் இருக்க வேண்டும், இருக்கக்கூடாது என நீ முடிவு செய்ய கூடாது. வீட்டை விட்டு வெளியே போ. உனக்கும் இந்த வீட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என அசிங்கப்படுத்துகிறார்.


அதற்கு எல்லாம் துணிந்த ஆதிரை "எனக்கு நீ எவ்வளவோ அசிங்கத்தை கொடுத்துட்ட. இதெல்லாம் ஒண்ணுமே இல்லை. இதுக்கு எல்லாம் அவமானப்பட்டு நான் போகமாட்டேன்" என சொல்லி மீண்டும் கரிகாலனை விரட்ட, குணசேகரன் ஆதிரையை அடிக்க கை ஓங்குகிறார். அதை ஞானம் தடுத்துவிடுகிறான். "கரிகாலன் இங்கே தான் இருப்பான்" என குணசேகரன் உறுதியாக சொல்லிவிட்டு செல்ல, ஆதிரை "நான் உங்களுக்கு முடிவு கட்டுறேன்" என சொல்லிவிட்டு அங்கிருந்து செல்கிறாள்.


 




வீரசங்கிலி அவனுடைய கார் பின்னாலேயே ஒரு கார் வருவதை பார்த்து விடுகிறான். யார் அது என இறங்கி அந்த காரை சுத்தி சுத்தி பார்க்கிறான். அவர்களை மிரட்டி வண்டியை திருப்பிக்கொண்டு போக சொல்கிறான். பின்னால் போவது போல போய் மீண்டும் ரவுடியின் காரை பாலோ செய்கிறார்கள் போலீஸ்.
வெளியில் சென்ற ஆதிரை மீண்டும் வீட்டுக்கு ஏதோ டாக்குமெண்ட்ஸ் எடுக்க வந்ததாக ரேணுகாவிடம் சொல்கிறாள். திரும்பி வந்த ஆதிரையை பார்த்து ஆச்சி கேவலமாக பேச சரியான பதிலடி கொடுக்கிறாள் ஆதிரை.

ரேணுகாவிடம் ஞானம் வருத்தப்பட்டு பேசுகிறான். "என்னுடைய மனசு சங்கடப்பட்டதைப் பற்றி தான் சொன்னேனே தவிர உங்க இரண்டு பேருக்கும் சண்டை மூட்டி விடணும் என எதுவும் செய்யவில்லை" என ஞானம் சொல்கிறான். "இதை பற்றி இனிமேல் பேசவேண்டாம். அவங்க பேசினதுக்கு நம்ம திருப்பி பேசிவிட்டோம். சரி நீங்க சாப்பிடுறீங்களா? நான் போய் கொண்டு வரட்டுமா?" என்கிறாள்.


"வெளியே போய் சாப்பிடலாமா? " என ஞானம் கேட்டுவிட்டு உடனே வேண்டாம் யாராவது தப்பாக நினைத்துக் கொள்வார்கள் வேண்டாம் என் சொல்லிவிடுகிறான். ரேணுகா அவனைத் திட்டவும் "சரி போகலாம்” எனக் கிளம்புகிறார்கள். வீரசங்கிலியின் காரை பின் தொடர்ந்து போலீஸ் கார் செல்கிறது. ஒரு இடத்தில் இறங்கியதும் ரவுடியின் கூட்டம் அவர்களை பார்த்து விடுகிறது.  மீண்டும் வந்து அவர்களை மிரட்டி "நான் போலீஸ். மரியாதையா இங்க இருந்து கிளம்புங்க" என சொல்லி போலீசிடமே சொல்கிறான் வீரசங்கிலி. அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது.

அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

வீரசங்கிலி ஆட்கள் தர்ஷினியை வேறு ஒரு இடத்திற்கு மாற்றி விடுகிறார்கள். வீரசங்கிலி அந்த இடத்திற்கு சென்று கொண்டிருக்கும்போது அவனைப் பின்தொடர்ந்து போலீஸ் டீம் ஜனனியுடன் செல்கிறது. அதற்குள் தர்ஷினி அந்த அடியாட்களிடம் இருந்து தப்பித்து விடுகிறாள். இதை தர்ஷினியை பாதுகாக்கும் அந்த பெண் வீரசங்கிலிடம் சொன்னதும் அவன் அதிர்ச்சி அடைந்து எல்லா இடத்திலும் ஆட்களை விட்டு தேட சொல்கிறான்.


 


 




ரேணுகாவையும், ஐஸ்வர்யாவையும் அழைத்துக் கொண்டு ஞானம் வெளியில் கிளம்ப, அவர்களிடம் எங்கே போகிறார்கள் என கதிர் கேட்கிறான். அதைக் கேட்டு டென்ஷனான ஞானம் "இவ்வளவு நாள் அவர் கேட்ட கேள்விக்கு எல்லாம் அமைதியா கையை கட்டிக்கிட்டு பதில் சொல்லிக்கிட்டு இருந்தேன். இப்போ நீ வந்து கேள்வி கேக்குற" என தூக்கியெறிந்து பேச "என்ன அண்ணே இப்படி எல்லாம் பேசுற?" என கதிர் சங்கடப்பட்டு கேட்கிறான். ஞானம் இப்படி பேசியதை சற்றும் எதிர்பார்க்காத நந்தினி அதிர்ச்சி அடைகிறாள்.

தர்ஷினியை அடைத்து வைத்திருந்த இடத்தை போலீஸ் டீம் கண்டுபிடித்து விடுகிறது. "பொண்ணை இங்கிருந்து தான் இடம் மாற்றி இருக்கிறார்கள். எப்படியாவது தேடிக் கண்டுபிடிங்க" என்கிறார் ஸ்பெஷல் ஆபீசர். தப்பித்து சென்ற தர்ஷினி ஒரு இடத்தில் போய் மயக்கம் போட்டு விழுந்து விடுகிறாள். அவளை பார்த்து ஒரு ஆள் ஓடி வருகிறான். அவன் வீர சங்கிலியின் அடியாளா எனத் தெரியவில்லை.


 




தர்ஷினியை நெருங்கிய ஜனனி அவளை போலீஸ் உதவியுடன் மீட்டு எடுப்பாளா? மிகவும் பரபரப்பான கட்டத்தில் ஒளிபரப்பாகி வருகிறது எதிர்நீச்சல் (Ethirneechal) சீரியல்.