சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் தான் இல்லத்தரசிகளின் ஒரே பொழுதுபோக்கு அம்சமாக இருக்கிறது. அந்த வகையில் ஒவ்வொரு சேனலும் போட்டி போட்டு கொண்டு ஏராளமான சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகும் சீரியல்களை இல்லத்தரசிகள் மட்டுமின்றி குடும்பத்தில் உள்ள குழந்தைகள், ஆண்கள் உட்பட அனைவரும் தவறாமல் பார்த்து ரசித்து வருகிறார்கள். அந்த வகையில் ப்ரைம் டைமில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் மிகவும் பிரபலமான தொடர்களில் ஒன்று 'எதிர்நீச்சல்'.
ஜனனி, சக்தி: இப்படியான சூழலில் இன்றைய (மார்ச் 25 ) எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. சக்தி, ஜனனி மற்றும் அஞ்சனா பேசி கொண்டு இருக்கிறார்கள். வீட்டில் நடந்த பிரச்சினை அனைத்தையும் பற்றி தெரிந்தும் சித்தார்த் இதுவரையில் அஞ்சனாவுக்கு போன் கூட செய்து பேசவில்லை அப்படி இருக்கையில் அவனை எப்படி நம்ப முடியும் என்பது பற்றி பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அப்போது அங்கே சித்தார்த் வருகிறான். "அவளை காதலிப்பது உண்மைனா எந்த நேரத்திலும் அவளை விட்டுக்கொடுக்க மாட்டேன் என சத்தியம் செய்து கொடு" என சக்தி சித்தார்த்திடம் சொல்ல "நான் உன்னை நிச்சயமா கைவிட மாட்டேன்" என அஞ்சனாவுக்கு சத்தியம் செய்து கொடுக்கிறான் சித்தார்த். அதை பார்த்துவிடும் உமையாள் சித்தரத்தை மிரட்டி "நீங்க எதுக்கு இவன் கூட பேசிக்கிட்டு இருக்கீங்க?" என ஜனனியையும், சக்தியையும் பார்த்து கேட்கிறாள் உமையாள். "நாங்க என் தங்கச்சியை கல்யாணம் பண்ணிக்க போற பையன் கிட்ட தான் பேசிகிட்டு இருக்கோம்" என சொல்ல டென்ஷனான உமையாள் சித்தார்த்தை பார்த்து முறைக்கிறாள்.
புதிதாக தர்ஷனை கைக்குள் போட்டுக் கொள்வதற்காக குணசேகரன் போடும் ட்ராமாவாக இந்த பிளான் இருக்கலாம் என யூகிக்கப்படுகிறது. வரும் எபிசோட்களில் இதன் உண்மை நிலவரம் தெரியவரும்.