சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal ) தொடரில் தர்ஷினியின் மனநிலை மோசமாக இருக்கும் இந்த சூழலில் கூட கரிகாலன் திருமணத்தின் மீதே குறியாக இருப்பதை கண்டு அனைவரும் எரிச்சலடைகிறார்கள். அந்த நேரத்தில் அழையா வீட்டுக்கு விருந்தாளியாக ஆச்சியின் மகள் உமையாள் மற்றும் அவரின் பேரன்கள் ராமசாமியும், கிருஷ்ணாசாமியும் குணசேகரன் வீட்டுக்கு வருகிறார்கள். கதிருக்கும் கரிகாலனுக்கும் கைகலப்பு ஏற்படுகிறது. இந்த சூழலில் எதிர்நீச்சல் தொடரின் இன்றைய (மார்ச் 20 ) எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
கரிகாலனை கதிர் கழுத்தை பிடித்து வீட்டை விட்டு வெளியே தள்ளுகிறான். மாடியில் இருந்து வேடிக்கை பார்த்த குணசேகரனை "யோவ் மாமா... வேடிக்கையா பாக்குற. இனி உன்னோட பொண்ணு எனக்கு வேணாம் யா" என சொல்லி கத்துகிறான் கரிகாலன். அவனையும், ஜான்சியையும் அடித்து விரட்டுகிறார்கள் கதிரும் ஞானமும். ஈஸ்வரியும் ஜனனியும் அதைப் பார்த்து அதிர்ச்சியில் நிற்கிறார்கள்.
தம்பிகள் அனைவரும் தன்னை பகைத்து எதிராக நிற்பதை பற்றி ஆச்சி, உமையாள், ராமசாமி மற்றும் கிருஷ்ணாசாமியிடம் சொல்லி வருத்தப்படுவது போல கலங்கி பேசுகிறார் குணசேகரன். "இவனுங்க எல்லாம் என்னை எதிர்த்து நிற்கவும் அனாதையாக தோற்றுப் போய் நிற்கிறேன்" என நடிக்கிறார். அவர் கலங்கி பேசுவதை பார்த்து வருத்தப்படுகிறார்கள் ஆச்சியின் மகள் மற்றும் பேரன்கள். இது அனைத்தையும் விசாலாட்சி அம்மா பார்த்துக்கொண்டு இருக்கிறார்.
அப்படி ஈஸ்வரி என்ன சொல்லி ஆச்சியின் குடும்பத்தை கண்டித்தாள் என்பது இன்றைய எபிசோடில் தான் தெரியவரும். உமையாள் மகன் ஏற்கனவே ஜனனியின் தங்கை அஞ்சனாவை காதலிக்கிறான். ஆனால் அந்த பையன் தான் உமையாள் மகன் என்பது அஞ்சன உட்பட ஜனனி வீட்டில் உள்ள யாருக்குமே தெரியாது. இப்போது இந்த திருமண பேச்சு வார்த்தை துவங்கியுள்ளதால் அடுத்து அஞ்சனாவின் காதல் கதை வெளியில் வரும் என எதிர்பாக்கப்படுகிறது. கத்தி குத்தப்பட்ட ஜீவானந்தம் நிலை என்ன ஆனது என்பது பற்றி இதுவரையில் சீரியலில் ரிவில் செய்யவில்லை.
பல ட்விஸ்ட்களுடன் ஒவ்வொரு நாளும் சின்னத்திரை ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது எதிர்நீச்சல் சீரியல்.