சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரில் இத்தனை நாட்களாக தர்ஷினியைக் கடத்தி வைத்திருந்த கதைக்களம் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்தது. தற்போது தர்ஷினி குணசேகரன் பாதுகாப்பில் இருக்க வேண்டும் என்ற நீதிபதியின் உத்தரவை கையில் வைத்துக் கொண்டு யாருமே தர்ஷினியை நெருங்க விடாமல் வைத்துக் கொண்டு இருக்கிறார் குணசேகரன். அந்த வகையில் எதிர்நீச்சல் தொடரின் இன்றைய (மார்ச் 19) எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
குணசேகரன் வீட்டுக்கு ஆச்சியின் மகள் உமையாளும் பேரன் கிருஷ்ணாசாமியும் வருகிறார்கள். அவர்களை ஈஸ்வரியும் தர்ஷினியும் அதிர்ச்சியுடன் பார்க்கிறார்கள். அவர்கள் வீட்டுக்குள் போனதும் அவர்கள் பின்னாலேயே என்ன விஷயம் எனப் பார்ப்பதற்கு சக்தி செல்கிறான். கரிகாலன் வழக்கம் போல கல்யாணம் பற்றி பேசி பிரச்சினையை ஆரம்பிக்கிறான். ஞானம் கரிகாலனை அறைய, ஆவேசமான கரிகாலன் குணசேகரனிடம் சென்று "உனக்கு யார் முக்கியம் நானா? இவனா?" என கதிரைக் காட்டி கேட்க கரிகாலன் கழுத்தைப் பிடித்து சண்டை போடுகிறான் கதிர்.
உமையாள் குணசேகரன் வீட்டுக்குள் என்ட்ரி கொடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? இப்போது தான் ஆச்சி ஜனனியைப் பற்றி புரிந்து கொண்டு இருக்கிறார். கூடிய விரைவில் ஜனனியை தன்னுடைய பேத்தியாக ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை கடவுள் கொடுக்க வேண்டும் என வேண்டிக் கொள்கிறார். மீண்டும் ஆச்சியின் மனசை உமையாள் மாற்றிவிடுவாரா? தர்ஷினி எப்போது சகஜ நிலைக்குத் திரும்புவாள்? குணசேகரனின் சாயம் எப்போது வெளுக்கும்? ஜீவானந்தம் நிலை என்ன ? இப்படி பல கேள்விகளுக்கும் வரும் எபிசோட்களில் விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.