சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடின் நேற்றைய (ஜனவரி 23) எபிசோடில் குணசேகரன் கலங்கி நிற்க, விசாலாட்சி அம்மா அரிவாளுடன் வந்து "அவளுங்க இனி இந்த வீட்டுக்கு தேவை இல்லை. அவள்களை வெட்டி இங்கேயே பொதைச்சுடு" என எகிற குணசேகரன் மிகவும் வருத்தப்பட்டு, என்னை எல்லாரும் ஏமாற்றி விட்டார்கள் என சொல்லி அழுகிறார்.  




மறுபக்கம் தர்ஷினி தொலைந்த இடத்திற்கு சென்று ஈஸ்வரியும் மற்றவர்களும் சென்று தேடிப் பார்க்கிறார்கள். ஜனனி ஒரு வீட்டில் சென்று விசாரிக்க செல்கிறாள். அந்த வீட்டிலிருந்த பெண் முதலில் தயங்கினாலும் பின்னர் தர்ஷினியை கடத்தும்போது எடுத்த வீடியோவை ஜனனியிடம் கொடுக்கிறார். அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜனனி ஓடிச்சென்று இதை மற்றவர்களிடம் காட்ட அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். போலீசுக்கு சென்று இதைக் காட்டி ட்ராக் செய்ய சொல்லலாம் என ஸ்டேஷனுக்கு விரைகிறார்கள்.

கதிரும் ஞானமும் வீட்டுக்கு வர, அவர்களை விசாலாட்சி அம்மா திட்டி அடிக்கிறார். இங்கே இருந்து கிளம்ப சொல்லி விரட்டுகிறார். “அவளுங்க நாடகம் ஆடுறாளுங்க. அவள்களை நம்பி அண்ணனை உயிரோட எரிப்பீங்களா?” என ஆவேசமாக பேசுகிறார். கதிரை நந்தினிக்கு போன் பண்ண சொல்கிறார்.


 




போன் செய்து நந்தினியிடம் "எங்க தேடிகிட்டு இருக்கீங்க? உங்களுக்கு என்ன தெரியும்? எல்லாத்தையும் நாங்க பாத்துக்குறோம். நீங்க எல்லாரும் வீட்டுக்கு வாங்க" என கதிர் கேட்க, நந்தினி அவனைத் திட்டி போனை வைத்துவிடுகிறாள்.

ராமசாமியும், கிருஷ்ணாசாமியும் குணசேகரன் வீட்டுக்கு வந்து உதவி செய்வதாக சொல்கிறார்கள். "மானம் மரியாதை போய் நிக்குறேன்.  என்னோட பொண்ண என் பொண்டாட்டி எங்க ஒளிச்சு வச்சு இருக்கா? என எனக்கு தெரியும்" என சொல்ல "நாங்க உங்களுடைய பொண்ண கண்டுபிடிச்சு கூட்டிட்டு வருவோம்" என சொல்லி அங்கிருந்து கிளம்புகிறார்கள் ராமசாமி  மற்றும் கிருஷ்ணசாமி. அத்துடன் நேற்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது.

அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர் நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

விசாலாட்சி அம்மா கதிரிடமும் ஞானத்திடமும் "உங்க அண்ணன் பக்கம் நிற்பதாக இருந்தால் வீட்டுக்குள் வாங்க. இல்லைனா அப்படியே போயிடுங்க" என சொல்ல இருவரும் வீட்டுக்குள் செல்கிறார்கள்.


 




ராமசாமியும் கிருஷ்ணசாமியும் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வெளியே வருகிறார்கள். ஜனனியும் ஈஸ்வரியும் அங்கே அவர்களை பார்த்து விடுகிறார்கள். "இதெல்லாம் உங்க வேலை தானா?" என ஜனனி அவர்களை பார்த்து கேட்க "இது மட்டும் இல்லை. உனக்கு எதிரா என்னென்ன வேலை செய்யணுமோ அதை எல்லாத்தையும் நாங்க செய்வோம்" என கிருஷ்ணசாமி சொல்ல "உங்களால என்ன செய்ய முடியுமோ செய்யுங்க" என துணிச்சலாக சொல்கிறாள்.


 




கதிர் தர்ஷனிடம் "எங்க இருக்காங்க எல்லாரும்?" எனக் கேட்க, அதைப் பார்த்த விசாலாட்சி அம்மா அவனை மிரட்டுகிறார். உடனே தாரா விசாலாட்சி அம்மாவை எதிர்த்து "அப்பத்தா நீங்க பேசுறது தான் தப்பு. எங்க அப்பா கரெக்ட் தான்" என சொல்லி கதிர் கையை பிடித்து அழைத்து செல்கிறாள். அதைப் பார்த்து கதிர் அசந்து போய் பார்க்கிறான். விசாலாட்சி அம்மா எதுவும் பேச முடியாமல் வாயடைத்து போகிறார். இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ஹிண்ட்!