சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரில் குணசேகரன் பேசிய பேச்சை கேட்டு "இனி இந்த வீட்டில் நாம சாப்பிட கூடாது. வாங்க நாம போய் ஹோட்டலில் சாப்பிடலாம்" என ஞானம், கதிர் மற்றும் தர்ஷனை அழைத்து கொண்டு ஹோட்டலுக்கு செல்கிறாள் தாரா. அங்கே சென்று அனைவரும் சந்தோஷமாக சாப்பிடுகிறார்கள்.
தர்ஷினியை தேடி செல்லும் போது குணசேகரன் கொடுத்த புகாரின் பேரில் ஜீவானந்தத்தை கைது செய்வதற்காக போலீஸ் மப்டியில் வந்து இருக்கிறார்கள். அதை பார்த்து ஜீவானந்தம் பெண்கள் அனைவரையும் இறங்கு ஒளிந்து கொள்ள சொல்கிறார். நேராக சென்றால் தர்ஷியை காப்பாற்றிவிடலாம் என சொல்லிவிட்டு போலீசுடன் சென்றுவிடுகிறார். அத்துடன் முந்தைய எபிசோட் முடிவுக்கு வந்தது. அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. சக்தி கதிரை அழைத்து பேசுகிறான். "நான் எத்தனையோ தப்பு பண்ணி இருக்கேன். அதெல்லாம் எதுக்காக பண்ணேன். அந்த மனுஷனுக்காக தானே பண்ணேன்" என அழுகிறான் கதிர்.
"என்ன அக்கா கொடும படுத்துறாங்க அப்படினு எழுதிவைச்சு இருக்கா?" என சொல்லி புலம்புகிறாள். அதை கேட்ட மற்றவர்கள் அதிர்ச்சி அடைகிறார்கள். மேலே அவர்கள் நால்வரும் ஏறி செல்வதை தர்ஷினி மறைந்திருந்து பார்த்து சந்தோஷ படுகிறாள். இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ப்ரோமோவாக வெளியாகியுள்ளது. தர்ஷினியை பத்திரமாக காப்பாத்தி கூட்டிட்டு போய் விடுவார்களா? ரவுடிகளிடம் ஜனனியும் மற்றவர்களும் சிக்கி கொள்வார்களா? மிகவும் பரபரப்பான கட்டத்தில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலின் இன்றைய எபிசோட் விறுவிறுப்பாக அமையும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.